சாதாரண ஸ்கூட்டர் விலையில் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்! மொத்த இந்தியாவையும் மிரள விட போறாங்க!

பழமையும், புதுமையும் கலந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ரெட்ரோ கிளாசிக் பைக்குகளுக்கு, இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை (Sales Milestone) படைத்து கொண்டுள்ளது.

இந்த வரிசையில் விற்பனையில் புதிய இமாலய சாதனை ஒன்றை ராயல் என்பீல்டு நிறுவனம் படைத்துள்ளது. நடப்பு 2025-26ம் நிதியாண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் அந்த இமாலய சாதனை ஆகும்.

Royal Enfield Classic 350

நடப்பு 2025-26ம் நிதியாண்டு கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. அப்போதில் இருந்து நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் மட்டும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 10.07 லட்சம் பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஒரு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்த அதிகபட்ச பைக்குகளின் எண்ணிக்கை இதுதான்.

இதற்கு முன்பாக வேறு எந்தவொரு நிதியாண்டிலும் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் இவ்வளவு அதிகமான பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்தது கிடையாது. அத்துடன் ஒரு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ஒட்டுமொத்தமாக 1 மில்லியனுக்கும் அதிகமான பைக்குகள் விற்பனை, அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்திருப்பதும் இதுவே முதல் முறை ஆகும்.

Royal Enfield Bullet 350

இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். இந்த 10.07 லட்சம் பைக்குகள் விற்பனை என்பது, நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களுக்கான (2025 ஏப்ரல் - 2026 பிப்ரவரி) எண்ணிக்கை மட்டுமே. நடப்பு 2025-26ம் நிதியாண்டில் இன்னும் ஒரு மாதம் பாக்கியுள்ளது (நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம்).

அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் சுமார் 1 லட்சம் பைக்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியானால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 11 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற பிரம்மாண்டமான எண்ணிக்கையுடன், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025-26ம் நிதியாண்டை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான சாதனைக்கு அதன் 350 சிசி பைக்குள்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. குறிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350), ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகியவை ஆகும்.

நடப்பு 2025-26ம் நிதியாண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ள 10.07 லட்சம் பைக்குகளில், இந்த 4 பைக்குகளின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மட்டும் 9.31 லட்சம் ஆகும். இதன் மூலம் இந்த 4 பைக்குகளும், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தூண் ஆக இருந்து வருவது தெளிவாகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் 250 சிசி ஹைப்ரிட் பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இதன் ஆரம்ப விலை (Price) வெறும் 1 அல்லது 1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விட குறைவான விலை ஆகும். ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ஒரு வேளை இந்த பைக் வந்தால், அதுதான் மிகவும் விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ராயல் என்பீல்டு பைக்காக இருக்கும். எனவே இந்த பைக் களமிறக்கப்பட்டால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 16:00 [IST]
English summary
Royal enfield 10 lakh units sales milestone in fy 2025 26 check all details here
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+