50 கிமீ மைலேஜ்... 250சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் ராயல் என்ஃபீல்டு!

இந்தியாவில் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தினசரி பயணத்திற்கு நல்ல மைலேஜ், குறைவான எரிபொருள் செலவு, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு ராயல் என்ஃபீல்டு புதிய மோட்டார்சைக்கிள் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மோட்டார்சைக்கிள் 250சிசி பிரிவில் உருவாக்கப்படுவதாகவும், இதில் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கனவுடன் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு இது பட்ஜெட் விலையிலான புதிய தேர்வாக அமையும். மேலும், லிட்டருக்கு 50 கிமீக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் இலக்குடன் இந்த பைக் உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Royal Enfield Hunter 350

250சிசி ஹைபிரிட் பைக்

ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வரும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வரும் 2028 நிதியாண்டில் (FY2028) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதன் அறிமுக தேதி குறித்து நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

50 கிமீ மைலேஜ்

ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வரும் இந்த புதிய பைக் பெட்ரோல் எஞ்சினுடன் மின்சார மோட்டார் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்படுவதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவது நிறுவனத்தின் நோக்கமாக இருக்கும். இதன் மூலம் நகர்ப்புற பயணங்களில் எரிபொருள் செலவுகளை குறைக்க முடியும். மேலும், இந்த புதிய பைக் பிஎஸ்7 மாசு உமிழ்வு தரத்திற்கு இணக்கமாகவும் உருவாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Also Read

இந்த மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 50 கிமீக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 100சிசி மற்றும் 125சிசி மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அடுத்ததாக அதிக திறன் கொண்ட பைக்குகளுக்கு மாற விரும்புகின்றனர். ஆனால், அதிக விலை, எரிபொருள் செலவு போன்ற காரணங்களால் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய 250சிசி பைக் உருவாக்கப்பட்டு வருகிறது.

தினசரி அலுவலக பயணம், நகரங்களுக்கு இடையிலான பயணம், வார இறுதி சுற்றுப்பயணம் என பல தேவைகளுக்கும் ஏற்ற மோட்டார்சைக்கிளை உருவாக்குவது நிறுவனத்தின் நோக்கமாக இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. அதிக திறன் கொண்ட பைக்கின் தோற்றத்தையும், கையாளும் அனுபவத்தையும் எதிர்பார்க்கும் இளம் வாடிக்கையாளர்களுக்கு இது புதிய வாய்ப்பாக அமையலாம்.

Also Read

பட்ஜெட் ரகம்

இந்த புதிய 250சிசி மோட்டார்சைக்கிள் ஹண்டர் 350-க்கு கீழ் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.1.20 லட்சம் ஆரம்ப விலையில் வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் அந்த நிறுவனத்தின் விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும்.

புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதுடன், ராயல் என்ஃபீல்டு தனது உற்பத்தி திறனையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய ஆண்டுக்கு 15 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கும் திறனை 20 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சுமார் ரூ.958 கோடி முதலீடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கும் திட்டமும் நிறுவனத்திடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: ET Auto

Article Published On: Friday, November 20, 2026, 9:55 [IST]
English summary
Royal enfield 250cc hybrid bike launch fy2028 mileage 50 kmpl
மேலும்... #royal enfield
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out