ஒன்னுமே இல்லாத பைக்கை வைத்து கல்லா கட்டும் ராயல் என்பீல்டு! பெருமைக்காகவே வாங்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் எடை 195 கிலோ ஆகும். எனவே இதை இயக்குவது மிகவும் கடினமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லை.

இது போன்ற குறைகள் இருந்தாலும், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை இயக்குவது கம்பீரமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜினையும், ராயல் என்பீல்டு புல்லட் 350 கொண்டுள்ளது. இவை அனைத்தும் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் குறைகளை எல்லாம் மறக்கடிக்க செய்து விடுகின்றன.

Royal Enfield Bullet 350

எனவே இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதற்கு ஒரு உதாரணம். ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25,040 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 16,489 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 8,551 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Bullet 350

இது 52 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் பட்டியலில் புல்லட் 350 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கிளாசிக் 350 (Classic 350) முதல் இடத்தை பெற்றுள்ளது.

தற்போது உள்ள மாடர்ன் பைக்குகளில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்படுவது வழக்கமான ஒரு விஷயமாகி விட்டது. ஆனால் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் ஹாலோஜன் ஹெட்லைட் மட்டுமே வழங்கப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் அலாய் வீல்களும் இல்லை.

தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கிடையாது. அடிப்படையான செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை மட்டுமே இந்த பைக் கொண்டுள்ளது. இருப்பினும் சக்தி வாய்ந்த 350 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை ராயல் என்பீல்டு புல்லட் 350 கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் சொல்லப்போனால் பழமையும், புதுமையும் கலந்த ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ராயல் என்பீல்டு புல்லட் 350 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இதன் ஆரம்ப விலை வெறும் 1.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) போன்ற பைக்குகளுக்கு எல்லாம் ராயல் என்பீல்டு புல்லட் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Wednesday, May 20, 2026, 18:24 [IST]
English summary
Royal enfield bullet 350 sales report april 2026 52 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+