இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா! இந்த பேருக்காகவே கண்ணை மூடிட்டு வாங்கலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (Honda Hness CB 350) மட்டுமல்லாது, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) போன்ற பைக்குகளுக்கும் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.
அத்துடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் ராயல் என்பீல்டு கோவன் கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350) போன்ற பைக்குகளுக்கும் கூட இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான். ராயல் என்பீல்டு நிறுவனம் எத்தனை பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தாலும் கூட, புல்லட் என்ற பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24,849 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 14,049 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 10,800 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனையில் 76.87 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
அத்துடன் இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles December 2025), ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் 8வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ஹோண்டா யுனிகார்ன் ஆகிய பைக்குகள் உள்ளன. இந்த வரிசையில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் 8வது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1,63,783 ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 2,04,434 ரூபாயாக உள்ளது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை குறைவான பைக்குகளில் ஒன்று என்ற பெருமை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கிற்கு உண்டு. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








