அடிமாட்டு விலையில் புது ராயல் என்பீல்டு பைக்! வெயிட் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மைலேஜ் பிச்சு ஒதறது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). இந்த பைக்கின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21,821 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 19,244 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 2,577 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனையில் 13.39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆனால் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனையில் சிறிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 22,345 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் அதன் பின் வந்த பிப்ரவரி மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 21,821 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 524 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2.35 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், கூடிய விரைவிலேயே ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என உறுதியாக நம்பலாம். ஏனெனில் இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாகும்.
தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1,63,783 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது பட்டாலியன் பிளாக் கலர் ஆப்ஷனின் (Colour Option) விலை ஆகும். இதற்கு அடுத்தபடியாக மிலிட்டரி ரெட் மற்றும் மிலிட்டரி பிளாக் கலர் ஆப்ஷன்களின் விலை 1,64,424 ரூபாயாக இருக்கிறது.
இந்த வரிசையில் ஸ்டாண்டர்டு பிளாக் மற்றும் ஸ்டாண்டர்டு மெரூன் கலர் ஆப்ஷன்களின் விலை 1,87,038 ரூபாயாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிளாக் கோல்டு கலர் ஆப்ஷனின் விலை 2,04,434 ரூபாயாக இருக்கிறது. இதுதான் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் அதிகபட்ச விலை ஆகும். இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் ஜே சீரிஸ் 350 சிசி சிங்கிள் சிலிண்டர் எஸ்ஓஹெச்சி ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. உகந்த சூழல்களில் இந்த இன்ஜினிடம் இருந்து ஒரு லிட்டருக்கு 36.2 கிலோ மீட்டர் மைலேஜை (Mileage) எதிர்பார்க்கலாம் என ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 470.6 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும். இதன் காரணமாக தொலை தூர பயணங்களின்போது, எரிபொருள் நிரப்புவதற்காக அடிக்கடி பைக்கை நிறுத்தி கொண்டே இருக்க வேண்டிய தேவை இல்லை.
எனினும் சாலை மற்றும் பைக்கின் கண்டிஷன், ஓட்டும் விதம் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் பொறுத்து, மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் இந்த பைக்கின் எடை 195 கிலோ ஆகும். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதும், பார்க்கிங் செய்வதும் கடினம். ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கை வாங்கும்போது, இதை எல்லாம் மனதில் வைத்து கொள்வது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு கோவன் கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350) மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், ராயல் என்பீல்டு புல்லட் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








