உலகின் பழைமையான பைக்கை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்! சாதாரண பைக் ரேட்ல வித்தா சும்மா விட முடியுமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாகும்.
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 22,345 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 19,163 புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 3,182 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனையில் 16.60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையான ராயல் என்பீல்டு பைக்குகளின் பட்டியலில், புல்லட் 350 பைக்கிற்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் 34,981 என்ற விற்பனை எண்ணிக்கையுடன், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக், மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஒப்பீட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24,849 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 22,345 ஆக குறைந்துள்ளது. அதாவது 2,504 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 10.08 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு, மிகவும் விலை குறைந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது. அதாவது இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.83 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆனால் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.64 லட்ச ரூபாய் மட்டுமே.
அதாவது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை விட 19 ஆயிரம் குறைவான விலையில் புல்லட் 350 பைக்கை வாங்கி விட முடியும். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 ஆகிய 2 பைக்குகளிலும், 350 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கானது, உலகில் இன்றளவும் உற்பத்தி செய்யப்பட்டு வரும் மிகவும் பழைமையான பைக்குகளில் ஒன்றாகும். கடந்த 1932ம் ஆண்டில் இருந்து புல்லட் பைக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீங்கள் ரெட்ரோ கிளாசிக் பைக் பிரியர் என்றால், ராயல் என்பீல்டு புல்லட் 350 உங்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அதே நேரத்தில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








