இந்த புல்லட் பைக்ல மணிக்கு 170 கிமீ வேகத்துல பறக்கலாம்.. இந்தியாவில் வெளியானது புதிய பைக்!

ஒருவழியாக நாம் எதிர்பார்த்து வந்த புல்லட் 650 பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. கடந்தாண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA நிகழ்வில் முதல் முறையாக புல்லட் 650 பைக்கை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். தொடர்ந்து அந்த மாதமே கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்வில் வைத்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்திவிட்டது. ராயல் என்ஃபீல்டின் ஏழாவது 650 சிசி பைக்காக அறிமுகமானது இந்த புல்லட் 650.

கடந்த மார்ச் மாதம் இந்த பைக் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியிருக்கிறது. நாம் எதிர்பார்த்ததைப் போலவே சற்று அதிகமான 3.65 லட்சம் ரூபாய் என்ற விலையில் தான் புல்லட் 650 வெளியாகியுள்ளது. கிளாஸிக் 650 பைக் விற்பனை செய்யப்படும் அதே விலையில் இந்த புல்லட் 650 பைக்கும் வெளியாகியிருக்கிறது.

Royal Enfield Bullet 650

கிளாஸிக் 650 பைக்கை 2025 மார்ச் மாதம் இந்தியாவில் வெளியிட்டது ராயல் என்ஃபீல்டு. வல்லம் ரெட், பிரன்திங்தோர் ப்ளூ, டீல் மற்றும் பிளாக் குரோம் ஆகிய நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டுகிறது கிளாஸிக் 650 பைக். இதில் ரெட் மற்றும் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களும் 3,64,856 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

புல்லட் 650 பைக்கானது ஒரு ரூபாய் கூட மாறாமல் அதே 3,64,856 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தற்போது வெளியாகியுள்ளது. கிளாஸிக் 650-யின் டீல் மற்றும் பிளாக் குரோம் ஆகிய நிறங்கள் முறையே 3.70 லட்சம் ரூபாய் மற்றும் 3.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளன. புல்லட் 650 பைக்கானது, பேட்டில்ஷிப் ப்ளூ மற்றும் கேனன் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியாகியிருக்கும் நிலையில், இரண்டு நிறங்களுமே ஒரே விலையையே கொண்டுள்ளன.

Royal Enfield Bullet 650

புல்லட் 350-யின் பெரிய வெர்ஷனாக அச்சு பிசகாமல் இருக்கிறது புல்லட் 650. புல்லட் டிசைனுடன், தங்களுடை 650 சிசி இன்ஜினை இணைத்து இந்தப் புதிய பைக்கை ராயல் என்ஃபீல்டு உருவாக்கியிருக்கிறது. கிளாஸிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளுக்கு இடையே டிசைனைத் தவிர மற்ற நிறைய அம்சங்கள் ஒன்றாகவே இருக்கும். அதேபோல் தான் கிளாஸிக் 650 மற்றும் புல்லட் 650 பைக்குகளுக்கு இடையிலும் வேறுபாடுகள் டிசைனைத் தவிர குறைவு தான்.

இந்த பைக்கில் அதே 648 சிசி, பேரலல் ட்வின், ஆயில்/ ஏர் கூல்டு இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 47 hp பவர் மற்றும் 52 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் உதவியுடன் மணிக்கு 160 கிமீ முதல் 170 கிமீ வரையிலான வேகத்தில் நெடுஞ்சாலைகளில் நாம் பறக்கலாம்.

குஷியான பயணத்திற்காக பைக்கின் முன்பக்கம் 120 மிமீ டிராவல் கொண்ட ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்டப்பும், பின்பக்கம் 90 மிமீ டிராவல் கொண்ட ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிளாஸிக் 650 பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிறிய டிஜிட்டல் டிஸ்பிளேவுடன் புல்லட் 650 பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

பெரிய இன்ஜினுடன் கூடிய அக்மார்க் புல்லட்டாக வந்து களமிறங்கியிருக்கிறது புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 650. கிளாஸிக் 650-யை விட 10,000 ரூபாய் வரையிலாவது குறைவான விலையில் இந்த புல்லட் பைக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிளாஸிக் 650-யின் அதே விலையில் வந்து களமிறங்கியிருக்கிறது. இது எந்த பைக்கைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிறிய குழப்பத்தை விளைவிக்கும். புல்லட் 350-யின் அப்கிரேடுக்கு ஏற்ற சரியாக பைக் இந்த புல்லட் 650.

Article Published On: Thursday, May 28, 2026, 16:55 [IST]
English summary
Royal enfield bullet 650 launched in india equals classic 650 price tag
மேலும்... #royal enfield #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out