ரூ.2.10 லட்சத்தில் கூர்க்கா படைப்பிரிவை சிறப்பிக்கும் ஸ்பெஷல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்!
கூர்க்கா ராணுவ படைப்பிரிவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் அம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் புதிய ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவின் வீரம், ஒழுக்கம், துணிச்சல் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் தனித்துவமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பில் மாறுதல்கள் செய்யப்படாமல், வழக்கமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் ராணுவ பாணியிலான தனித்துவமான வடிவமைப்பு மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய கிளாசிக் 350 கூர்க்கா எடிஷனின் முக்கிய சிறப்பம்சமாக கூர்க்கா க்ரீன் (Gorkha Green) என்ற பிரத்யேக வண்ணத் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்த வண்ணத் தேர்வு மோட்டார்சைக்கிளுக்கு ராணுவ சீருடை வண்ணத்தை நினைவூட்டுவதுடன் கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. இதனுடன் கூர்க்கா படைப்பிரிவின் அடையாளமாக விளங்கும் இரண்டு குக்ரி கத்திகளை நினைவூட்டும் பிரத்யேக அடையாளச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளைவிட இந்த ஸ்பெஷல் எடிஷன் தனித்துவமாக காட்சியளிக்கிறது.
வடிவமைப்பு மாற்றங்கள் மட்டுமின்றி, அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் சில வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கியர் மாற்றங்களை எளிதாகவும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும். மேலும் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை பயணத்தின்போது சார்ஜ் செய்ய வசதியாக டைப் சி யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர, கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளஇன் அடிப்படை வடிவமைப்பு மற்றும் ரைடிங் அனுபவத்தில் பெரிய மாற்றம் இருக்காது. வழக்கமான ரைடிங் பொசிஷன் மற்றும் ராயல் என்ஃபீல்டு மாடல்களின் தனித்துவமான ஜே-சீரிஸ் எஞ்சின் ஆகியவை தொடர்ந்து இடம்பெறுகின்றன. இதனால் கிளாசிக் 350 வழங்கும் பாரம்பரியமான ரைடிங் அனுபவத்தை இந்த புதிய கூர்க்கா எடிஷனிலும் இருக்கும்.
புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 கூர்க்கா எடிசன் மாடலுக்கு ரூ.2,10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கான புக்கிங்கும் டீலர்களில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசனுடன் ராயல் என்ஃபீல்டு கூர்க்கா கலெக்ஷன் என்ற பிரத்யேக ஆடை மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்களின் தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. உயர்வகை தனித்துவமான காலணிகள், ஹெல்மெட்டுகள் உள்ளிட்ட பல கூடுதல் விஷயங்களையும் விருப்பத்தின் பேரில் வாங்க முடியும்.ollectibles ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த கூர்க்கா கலெக்ஷன் பொருட்களிலும் ராணுவ பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில், அடையாளச் சின்னத்துடன் பிரத்யேக வண்ணக் கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கை எம்பிராய்டரி செய்யப்பட்ட பேட்ஜ்கள், பிரத்யேகமான லெதர் போன்றவற்றுடன் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், புதிய கிளாசிக் 350 கூர்க்கா எடிஷன் என்பது வெறும் புதிய வண்ணத் தேர்வு என்பது இல்லாமல் சில கூடுதல் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை வெகுவாக கவரும் என்று கூற முடியும்.
இந்த பண்டிகை காலத்தில் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளை வாங்க விரும்புவோருக்கு இது தனித்துவமான தேர்வாக அமையும். இந்த புதிய மாடலுக்கு முன்பதிவும் துவங்கி இருப்பதால், அருகாமையில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஷோரூமில் விசாரணை செய்து புக்கிங் செய்து கொள்ளலாம். இது மதிப்பு மிக்க தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications

