விஜய் முதல்வரான நேரத்தில் தமிழகத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய பிரபல நிறுவனம்! ஆயிரக்கணக்கான கோடி முதலீடு போச்சு!

இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் 350 சிசி பைக்குகளில் ஒன்றாக இருப்பது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). இதன் ஆரம்ப விலை 1.86 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ரெட்டிச் ரெட் கலர் ஆப்ஷனின் (Colour Option) விலை ஆகும்.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இது எமரால்டு கலர் ஆப்ஷனின் விலை ஆகும். இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.

Royal Enfield Classic 350

இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 37,967 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26,801 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Classic 350

அதாவது இம்முறை 11,166 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 42 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை கிளாசிக் 350 பெற்றுள்ளது.

நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கிளாசிக் 350 மட்டுமல்லாது, புல்லட் 350, ஹண்டர் 350, மீட்டியோர் 350, 650 ட்வின்ஸ், குரில்லா 450, ஹிமாலயன் ஆகிய பைக்குகளும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அவற்றின் வளர்ச்சி விகிதம் முறையே 52 சதவீதம், 21 சதவீதம், 32 சதவீதம், 30 சதவீதம், 169 சதவீதம் மற்றும் 13 சதவீதமாக உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் சூப்பர் மீட்டியோர் மற்றும் சூட்கன் ஆகிய 2 பைக்குகள் மட்டுமே நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அவற்றின் வீழ்ச்சி சதவீதம் முறையே 49 சதவீதம் மற்றும் 38 சதவீதமாக உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு மிகப்பெரிய தேவை உருவாகி கொண்டிருப்பதையே இந்த புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதனால் ராயல் என்பீல்டு நிறுவனம் உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிதாக தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகே இந்த தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக சுமார் 2,500 கோடி ரூபாயை ராயல் என்பீல்டு நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டிற்கு வெளியே அமைக்கப்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் தொழிற்சாலையாக ஆந்திர தொழிற்சாலை அமைய போகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டிற்கு வெளியே ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் தொழிற்சாலையை அமைக்க தற்போது முடிவு செய்திருப்பது தமிழ்நாட்டில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு சந்தையில் தேவை அதிகரித்து வரும் நிலையில், புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். இதன் மூலம் ராயல் என்பீல்டு பைக்குகளை முன்பதிவு செய்பவர்களுக்கு காலதாமதம் இன்றி விரைவாக டெலிவரி கிடைக்கும்.

Article Published On: Wednesday, May 20, 2026, 15:48 [IST]
English summary
Royal enfield classic 350 registers 42 per cent growth in april 2026
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+