சொந்த கம்பெனி தயாரிப்புகளையே மிரள விடும் ராயல் என்பீல்டு பைக்! விலை இவ்ளோதானா! அதான் சேல்ஸ் எகிறுது!
இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பது கிளாசிக் 350 பைக்தான். சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) அப்படிதான் சொல்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 34,958 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 29,637 கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5,321 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனையில் 17.95 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles December 2025), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், 6வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக், 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி பார்த்தால், கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1,82,658 ரூபாயாக இருக்கிறது. இது ரெட்டிச் ரெட் கலர் ஆப்ஷனின் விலை ஆகும். அதே நேரத்தில் டாப் மாடலின் விலை 2,17,585 ரூபாயாக இருக்கிறது. இது எமரால்டு கலர் ஆப்ஷனின் விலை ஆகும்.
இடைப்பட்ட மாடல்களான ஹால்சியான் பிளாக் கலர் ஆப்ஷனின் விலை 1,85,347 ரூபாய் ஆகவும், மெட்ராஸ் ரெட் மற்றும் ஜோத்பூர் ப்ளூ கலர் ஆப்ஷன்களின் விலை 1,88,732 ரூபாய் ஆகவும் இருக்கிறது. அதே நேரத்தில் மெடாலியன் ப்ரோன்ஸ் கலர் ஆப்ஷனின் விலை 1,92,994 ரூபாயாக உள்ளது.
இவை மட்டும்தான் 2 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் கலர் ஆப்ஷன்கள் ஆகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் எஞ்சிய அனைத்து கலர் ஆப்ஷன்களின் விலையும் 2 லட்ச ரூபாய்க்கு மேல்தான் வருகிறது. இதன்படி கமாண்டோ சாண்ட் கலர் ஆப்ஷனின் விலை 2,04,340 ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் ஸ்டீல்த் பிளாக் மற்றும் கன்ரே கலர் ஆப்ஷன்களின் விலை 2,12,856 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு 350 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (Honda H'ness CB350) போன்ற பைக்குகளுக்கு எல்லாம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது. அவ்வளவு ஏன்? ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மற்றும் புல்லட் 350 போன்ற பைக்குகளுக்கும் கூட, கிளாசிக் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான்.


Click it and Unblock the Notifications








