ஒரு லிட்டருக்கு உறுதியா 42 கிமீ மைலேஜ் கிடைக்கும்! மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக் எது என கேட்டால், பச்சை குழந்தை கூட, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) என சரியாக பதில் கூறி விடும். ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 34,307 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 30,641 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Royal Enfield Classic 350

அதாவது இம்முறை 3,666 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனையில் 11.96 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனையில் சற்றே வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 34,981 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 34,307 ஆக சரிவடைந்துள்ளது. அதாவது இந்த வகையில் பார்த்தால் 674 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Classic 350

இது 1.93 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் கூடிய விரைவிலேயே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதாந்திர ரீதியிலான விற்பனையில் சிறிய வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகமாக விற்பனையான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை, கிளாசிக் 350 தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது.

இதற்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு, வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் வரவேற்புதான் மிகவும் முக்கியமான காரணம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1,82,658 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ரெடிச் ரெட் கலர் ஆப்ஷனின் (Colour Option) விலை ஆகும்.

அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் மாடலின் விலை 2,17,585 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எமரால்டு கலர் ஆப்ஷனின் விலை ஆகும். இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஒரு லிட்டருக்கு 41.55 கிலோ மீட்டர் என ராயல் என்பீல்டு என ஆட்டோகார் இந்தியா தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பி விட்டால், 540.15 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும். இது தொலை தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றது ஆகும். அடிக்கடி பைக்கை நிறுத்தி, எரிபொருள் நிரப்பி கொண்டே இருக்க வேண்டிய தேவையை இது குறைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு கோவன் கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350), ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, March 29, 2026, 20:00 [IST]
English summary
Royal enfield classic 350 sales report february 2026 12 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+