இங்கிலாந்து நிறுவனத்துடன் சேர்ந்து தமிழக நிறுவனத்திற்கு ஆப்பு வைக்க போகும் பஜாஜ்! ஏப்ரல் மாசம் ரணகளமாக போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). தற்போதைய நிலையில் இதுதான் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் ஆகும்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 30,582 கிளாசிக் 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 34,981 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது 4,399 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
இது 14.38 சதவீத வளர்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டை போல், மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. ஆனால் இது மிகவும் சிறிய அளவிலான வளர்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 34,958 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதன்பின் வந்த நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 34,981 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது 23 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 0.07 சதவீத வளர்ச்சி ஆகும்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.83 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.18 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி டைப் சி சார்ஜர், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் க்ளட்ச், ட்ரிப்பர் நேவிகேஷன், சிங்கிள் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இது பழைமையும், புதுமையும் கலந்த ஒரே ரெட்ரோ கிளாசிக் பைக் ஆகும். இதன் காரணமாகவே இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாக கூடிய ராயல் என்பீல்டு பைக்காக இது திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் உடன் கூட்டணியில் உள்ள இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம், டிரையம்ப் ஸ்பீடு டி4 (Triumph Speed T4), டிரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400), டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 (Triumph Scrambler 400) மற்றும் டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 (Triumph Thruxton 400) ஆகிய பைக்குகளின் 350 சிசி வெர்ஷன்களை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த புதிய பைக்குகளின் வருகை, தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்பான கிளாசிக் 350 பைக்கிற்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில், மிக கடுமையான போட்டியை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








