ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா! டீசல் புல்லட் ஓட்னவங்க எல்லாம் ஆச்சரியமா பாப்பாங்கல்ல!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதுகெலும்பு என கிளாசிக் 350 பைக்கை குறிப்பிடலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஈட்டி தந்து கொண்டுள்ளது கிளாசிக் 350.

இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்திருப்பதுடன், விற்பனையில் சிறப்பான வளர்ச்சியையும் சந்தித்துள்ளது ராயல் என்பீல்டு கிளாசிக் 350. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 34,594 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Classic 350

இது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 20.84 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் என்ற பெருமையை கிளாசிக் 350 பெற்றுள்ளது. இது வழக்கமாக ஒவ்வொரு மாதமும் நடைபெற கூடிய ஒன்றுதான்.

அதே நேரத்தில் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில், 8வது இடத்தை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி, ஹோண்டா யூனிகார்ன் மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிய பைக்குகள் உள்ளன.

Royal Enfield Classic 350

இந்த வரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1,85,854 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அதன் ஃப்ளையிங் ஃப்ளா சி6 (Royal Enfield Flying Flea C6) பைக்கின் டெலிவரி (Delivery) தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் (Eletric Bike) ஆகும். இந்த பைக்கில் 3.91 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது.

இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 154 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஓரளவிற்கு சிறப்பான ரைடிங் ரேஞ்ச் (Riding Range) ஆக கருதப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் நிரப்புவதற்கு 1 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் முழுமையாக நிரப்ப 2 மணி நேரம் மற்றும் 16 நிமிடங்கள் ஆகும். மறுபக்கம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.7 வினாடிகளை மட்டுமே இந்த எலெக்ட்ரிக் பைக் எடுத்து கொள்ளும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிலோ மீட்டர்களாக உள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளா சி6 பைக்கின் விலை 2.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாஸ் (BaaS) முறையிலும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை நீங்கள் வாங்கலாம். பாஸ் முறையில் இதன் விலை வெறும் 1.99 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த முறையை நீங்கள் தேர்வு செய்தால் பேட்டரி இஎம்ஐ-க்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் முதலில் கிளாசிக் 350 பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனைதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் ஃப்ளையிங் ஃப்ளா சி6 எலெக்ட்ரிக் பைக்கிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Tuesday, June 23, 2026, 12:51 [IST]
English summary
Royal enfield classic 350 sales report may 2026 21 per cent growth
மேலும்... #royal enfield #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out