ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் வெள்ளை நிற தேர்வு அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மிகவும் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் புதிய 'சிக்னேச்சர் வொயிட்' (Signature White) என்ற வெள்ளை வண்ணத் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த பிரீமியம் வண்ணத்தை சந்தையில் களமிறக்கியுள்ளது.

முந்தைய தலைமுறை கிளாசிக் 350 மாடலில் வெள்ளை வண்ணத் தேர்வு வழங்கப்பட்டது. அதற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வந்தது. எனினும், தற்போதைய ஜே-சீரிஸ் (J-series) எஞ்சின் கொண்ட கிளாசிக் 350 மாடலில் வெள்ளை வண்ணத் தேர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், மீண்டும் வெள்ளை வண்ணத் தேர்வு 'சிக்னேச்சர் வொயிட்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Royal Enfield Classic 350 White

புதிய சிக்னேச்சர் வொயிட் மாடலின் பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்கள் வெள்ளை வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களை சுற்றி Pinstriping வரிக் கோடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளின் பாரம்பரிய வட்ட வடிவ பேட்ஜ் மற்றும் கிளாசிக் பெயரும் இதன் பிரீமியம் தோற்றத்தை உயர்த்துகின்றன.

Also Read

தனித்து தெரியும் வகையில் மட்கார்டு, ஹெட்லைட் ஹவுசிங் மற்றும் ஃப்ரேம் ஆகியவற்றில் கருப்பு வண்ண பெயிண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம், சைலென்சர், எஞ்சின் கவர்கள் மற்றும் ரியர் வியூ மிரர்களில் என்ஃபீல்டு நிறுவனத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில் க்ரோம் பூச்சு பாகங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பழுப்பு வண்ண இருக்கை மற்றும் ஒயர் ஸ்போக் சக்கரங்களும் இதற்கு பாரம்பரிய சாயலை வழங்குகிறது.

இந்த வண்ணத் தேர்விலும் வழக்கமான சிங்கிள் சிலிண்டருடன் கூடிய 349சிசி, ஏர்-ஆயில் கூல்டு வகையிலான ஜே-சீரிஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 6,100 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த எஞ்சினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் அண்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி இணைக்கப்பட்டுள்ளது. நகரப் போக்குவரத்தில் அடிக்கடி கியர் மாற்றும்போது இலகுவான கிளட்ச் ஃபீலை தருவதற்கும், அதிவேகத்தில் இருந்து சட்டென கியர்களை குறைக்கும்போது பின்புற வீல் லாக் ஆகாமல் இருப்பதற்கும் இந்த ஸ்லிப்பர் கிளட்ச் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Also Read

இந்த சிக்னேச்சர் வொயிட் வேரியண்ட்டில் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் உள்ளன. முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் டிஸ்க் பிரேக்குகள் சேர்க்கப்பட்டு, பாதுகாப்புக்காக டியூவல் சேனல் ஏபிஎஸ் (Dual-channel ABS) பாதுகாப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கிளாசிக் 350 சிக்னேச்சர் வொயிட் மாடலுக்கு ரூ.2,23,275 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கிளாசிக் 350 வரிசையில் எமரால்டு (Emerald) நிறத்திற்கு நிகரான டாப் எண்ட் வேரியண்ட்டாக விற்பனைக்கு வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் ஆரம்ப விலை ரூ.1.87 லட்சத்தில் (ரெட்டிட்ச் ரெட்) தொடங்கி, டாப் வேரியண்ட்டான சிக்னேச்சர் வொயிட் மற்றும் எமரால்டு மாடல்களில் ரூ.2.23 லட்சம் வரை செல்கிறது. இந்த புதிய வண்ணத் தேர்வு மாடலுக்கான புக்கிங் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஷோரூம்களில் தொடங்கப்பட்டுள்ளது.

Article Published On: Tuesday, September 22, 2026, 9:09 [IST]
English summary
Royal enfield classic 350 signature white colour launched india 2026 price details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out