சூப்பர் வசதிகளுடன் கிளாஸிக் 350 பைக்கை அப்டேட் செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு

2026ம் ஆண்டிற்காக கிளாஸிக் 350 பைக்கை அப்டேட் செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு. அப்டேட் என்றவுடன், புதிய நிறங்கள், புதிய டிசைன் என்று நினைத்து விடாதீர்கள். அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. மாறாக சில கூடுதலான, ஒரு மாடர்ன் பைக்கில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய வசதிகளைக் கொடுத்து அப்டேட் செய்துல்ளது அந்நிறுவனம். அவை என்னென்னவென்று பார்க்கலாம்.

இரண்டு வசதிகள். ஒன்று USB டைப்-C சார்ஜிங் போர்ட், மற்றொன்று ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச். இந்த இரண்டு வசதிகளும் இன்றைய நிலையில் தனித்துவமானவை கிடையாது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கொஞ்சம் கூடுதல் விலையைக் கொண்டிருக்கும் பைக்குகளில் இருந்தே இந்த வசதிகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டன. தற்போது அதனை கிளாஸிக் 350 பைக்கிலும் கொடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு.

Royal Enfield Classic 350

டைப்-C சார்ஜிங் போர்ட் வசதியானது அவசரகாலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உதவும். வேகமாக சார்ஜ் ஆகவில்லை என்றாலும், போதுமான அளவிற்கு சார்ஜ் செய்ய இந்த வசதி உதவும். இரண்டாவது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச், இதனை ஒரு பாதுகாப்பு அம்சம் என்று கூட சொல்லலாம். இந்த வசதி இருந்தால் சில நேரங்களில் நாம் விபத்துக்களில் சிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். திடீரென எதிரெ ஒரு வாகனமோ வேறேதோ ஒரு தடங்கலோ வந்துவிட்டது. எனவே உடனடியாக வேகமாக டவுன்ஷிப்ட் செய்கிறீர்கள். அப்படியான நேரத்தில் சாதாரண கிளட்ச் என்றால் வீல் லாக் ஆகி, பைக் நிலை குலைந்துவிடும். ஆனால் ஸ்லிப்பர் கிளட்ச் இருந்தால், வீல் லாக் ஆவதைத் தடுத்து விபத்தையும் தடுக்க உதவும்.

Royal Enfield Classic 350

அசிஸ்ட் வசதியானது கிளட்ச் லீவரை இலகுவாக்கும். அசிஸ்ட் கிளட்ச் இல்லாத பைக்கை விட, இருக்கும் பைக்கில் கிளட்ச் லீவர் ஈஸியாக இருப்பதை நீங்கள் உணரலாம். கிளாஸிக் 350 போன்ற ஹெவியான ஒரு பைக்கிறகு அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்சை ராயல் என்ஃபீல்டு கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு செய்தி.

இதனைத் தவிர புதிய கிளாஸிக் 350-யில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த இரண்டு வசதிகளையும் கிளாஸிக் 350 பைக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் ராயல் என்ஃபீல்டு கொடுக்கவில்லை. ஏற்கனவே டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியைக் கொண்டிருக்கும் டாப் எண்டு வேரியன்ட்களில் மட்டுமே புதிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒன்பது விதமான நிறங்களில் இந்த கிளாஸியான 350 சிசி பைக்கை நாம் வாங்கலாம். 1.87 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இதன் லைன்-அப் தொடங்குகிறது. இதன் டாப் எண்டு எமரால்டு வேரியன்ட் அதிகபட்சமாக 2.24 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஸ்ட்ராங்கான புல்லிங் பவரைக் கொண்ட தொடக்கநிலை ப்ரீமியம் பைக்காக கிளாஸிக் 350 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக்கில் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 20.2 hp பவர் மற்றும் 27 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது தற்போது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அம்சங்கள் கிளாஸில் 350 பைக்கை மேலும் வாங்கத்தூண்டும் ஒன்றாக மாற்றியிருக்கின்றன. கிளாஸிக் 350 பைக்கைப் பற்றி நாம் தனியே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் அனைத்து பைக் ரைடர்களும், அனைத்து வாடிக்கையாளர்களும் வாங்க நினைக்கும் ஒரு பைக். ராயல் என்ஃபீல்டின் அதிகம் விற்பனையாகும் பைக்கும் இது தான்.

Article Published On: Thursday, July 16, 2026, 15:39 [IST]
English summary
Royal enfield classic 350 updated with two new features in india
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out