ரூ.3.58 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினெட்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!!

டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான பதிப்பாக வந்துள்ள இந்த புதிய கஃபே ரேஸர் வகை மாடல் ரூ.3.58 லட்சம் முதல் ரூ.3.88 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

புதிய கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிளில் பெரிய அளவிலான டிசைன் மற்றும் எஞ்சின் மாற்றங்கள் இல்லை. தினசரி பயன்பாட்டிற்கு உதவும் வகையில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலில் இன்ஸ்ட்ரூமென்ட் கவுல் கருப்பு வண்ணப் பூச்சுடன் வந்துள்ளது. இது கூடுதல் வசீகரத்தை வழங்குகிறது. தவிரவும், எல்இடி இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

RE Continental GT650

புதிய மாடலில் யுஎஸ்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜர் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இடம்பெற்றுள்ளது. கருப்பு பூச்சுடன் கூடிய எஞ்சின், சைலென்சர், காஸ்ட் அலாய் வீல்கள் உள்ளிட்டவை புதிய அம்சங்களாக உள்ளன. இந்த புதிய மாடலானது ராக்கர் ரெட், பிரிட்டிஷ் ரேஸிங் க்ரீன், அபெக்ஸ் க்ரே மற்றும் மிஸ்டர் க்ளீன் ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

இதில், ராக்கர் ரெட் மற்றும் அபெக்ஸ் க்ரே வேரியண்ட்டுகளில் காஸ்ட் அலாய் வீல்களும், கருப்பு பூச்சுடன் கூடிய எஞ்சின் மற்றும் சைலென்சர் இடம்பெற்றுள்ளது. பிரிட்டிஷ் ரேஸிங் க்ரீன் மற்றும் மிஸ்டர் க்ளீன் ஆகிய மாடல்களில் வழக்கம்போல் ஸ்போக்ஸ் வீல்கள் உள்ளன. இந்த வேரியண்ட்டுகளில் எஞ்சின் கருப்பு பூச்சு இல்லாமல் கிடைக்கும்.

RE Continental GT650

புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிள் அதே 648சிசி ஏர்-ஆயில் கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 எச்பி பவரையும், 52.3 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சிறப்பான டார்க் திறனை வழங்கும் வகையில் எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிளில் சேஸீ உள்ளிட்ட முக்கிய பாகங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே ட்யூபியூலர் டபுள் கிராடில் ஃப்ரேம் கொண்ட சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில் இது ஒரு முழுமையான அப்டேட் என்று கூற முடியாவிட்டாலும், தோற்றத்தில் கூடுதல் வசீகர அம்சங்கள் மற்றும் சில முக்கிய வசதிகளை சேர்த்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலானது நாடு முழுவதும் உள்ள அனைத்து ராயல் என்ஃபீல்டு டீலர்களிலும் தற்போது விற்பனைக்கு கிடைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Article Published On: Saturday, August 15, 2026, 14:03 [IST]
English summary
Royal enfield continental gt 650 updated 2026 launched price features specs
மேலும்... #royal enfield #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out