சென்னை ராயல் என்ஃபீல்டு பைக்குகளை இனி இந்த நாட்டிற்கும் அனுப்பனுமா? கப்பலில் மாதக்கணக்கில் ஆகும்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மேலும், துவக்கத்திலேயே மூன்று புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலக அரங்கில் ராயல் என்ஃபீல்டின் நெட்வொர்க் வலுபெற்று இருப்பதுடன், இந்தியாவின் பொறியியல் நிபுணத்துவம் மற்ற வெளிநாடுகளுக்கும் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வு குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் மிகவும் பழமையான பைக் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று, ராயல் என்ஃபீல்டு ஆகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தோன்றிய பழமையான நிறுவனம். இங்கிலாந்தில் தோன்றினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் முழுக்க முழுக்க இந்திய பைக் நிறுவனமாகவே ராயல் என்ஃபீல்டு வளர ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முக்கியமான நகரமாக மதராஸ் விளங்கியதால் சென்னையில் ராயல் என்ஃபீல்டின் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டது.

royal enfield entered panama market

அதன்பின் சென்னைக்கு அருகே மேலும் ஒரு உற்பத்தி தொழிற்சாலையை ராயல் என்ஃபீல்டு நிறுவியது. இந்த சென்னை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, மற்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேநேரம், கடந்த ஐந்து ஆண்டுகளில் சில வெளிநாடுகளிலும் அசெம்பிள் ஆலைகளை ராயல் என்ஃபீல்டு நிறுவியுள்ளது.

அதாவது, இந்தியாவில் இருந்து பாகங்களாக கொண்டுச் செல்லப்பட்டு அந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் முழு மோட்டார்சைக்கிளாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகும். இதன் மூலமாக குறிப்பாக பிரேசில், அர்ஜெண்டினா, கொலம்பியா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் ராயல் என்ஃபீல்டின் நெட்வொர்க் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

royal enfield entered panama market

அருகருகே உள்ள நாடுகளாக இருப்பினும், மேற்கூறப்பட்ட மூன்று தென் அமெரிக்க நாடுகளிலும் ராயல் என்ஃபீல்டிற்கு தலா ஒரு அசெம்பிள் தொழிற்சாலை உள்ளது. இதனாலேயே மற்ற தென் அமெரிக்க நாடுகளில் மார்க்கெட்டை பெரிதுப்படுத்த தீவிரம் காட்டிவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் தற்போது நுழைந்துள்ளது.

வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளை இணைக்கும் முக்கியமான பாலமாக விளங்கும் பனாமாவில் ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350, ஹிமாலயன் 450 மனா பிளாக் எடிஷன் மற்றும் கிளாசிக் 650 என்கிற மூன்று பைக்குகள் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மூன்றுமே பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான வெவ்வேறு விதமான தோற்றம் கொண்டவை ஆகும்.

அதாவது, ஹிமாலயன் 450 ஆனது அட்வென்ச்சர் பயணங்களுக்கான மோட்டார்சைக்கிள் ஆகும். பனாமா மக்கள் இவ்வாறான பைக்கை தான் அதிகம் விரும்புவார்கள் என்பதால், இது அங்கு நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோன் கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 650 பைக்குகள் ராயல் என்ஃபீல்டின் பழமையான ரெட்ரோ தோற்றத்தை கொண்ட அன்றாட பயன்பாட்டிற்கான மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

இவை மூன்றும் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளன. மேலும், இந்த மூன்று ராயல் என்ஃபீல்டு பைக்குகளும் இந்தியாவில் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு பனாமா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இருப்பினும், இதைவிட பனாமா நாட்டிலேயோ அல்லது அதற்கு அருகில் உள்ள வேறு ஏதேனும் நாட்டிலோ பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுதான் இலாபகரமாக இருக்கும் என்பதால், தென் அமெரிக்க நாடுகளின் அசெம்பிள் தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் இதற்காக பயன்படுத்தப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்க நாடுகள் தான் சமீப காலமாக இந்த நிறுவனத்தின் இலக்காக உள்ளதால், பனாமா நாட்டில் எதிர்பார்த்த விற்பனை கிடைத்தால் அந்த நாட்டிலும் புதியதாக அசெம்பிள் தொழிற்சாலையை நிறுவவும் ராயல் என்ஃபீல்டு தயங்காது என்றே எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Friday, May 29, 2026, 11:16 [IST]
English summary
Royal enfield entered central american motorcycle market panama check all details here
மேலும்... #royal enfield #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out