புக் செய்த ஒவ்வொருத்தரும் சந்தோஷமாக டெலிவிரி எடுத்துட்டு போறாங்க! சொன்னதை செய்துக் காட்டிய ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கான ஃபிளையிங் ஃப்ளே சி6 -இன் டெலிவிரிகள் பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நகரங்களில் இந்த பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள படங்களையும், ஃபிளையிங் ஃப்ளே சி6 எலெக்ட்ரிக் பைக்கை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்து வரும் நிலையில், முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்காக ஃபிளையிங் ஃப்ளே சி6 மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால், இதற்காகவே ஃபிளையிங் ஃப்ளே என்கிற பிராண்டையே ராயல் என்ஃபீல்டு புதியதாக துவங்கியுள்ளது.

royal enfield flying flea c6 electric bike deliveries

அதாவது, பைக்கின் பெயர் சி6 மட்டுமே; ஃபிளையிங் ஃப்ளே பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுவதால் ஃபிளையிங் ஃப்ளே சி6 என அழைக்கப்படுகிறது. நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக விளங்கும் ஃபிளையிங் ஃப்ளே சி6 -இன் டெலிவிரிகள் தற்போது பெங்களூருவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. அதாவது, புக் செய்தவர்களுக்கு இந்த பைக்கை டெலிவிரி கொடுக்கும் பணிகள் அறிமுகத்திற்கு பின் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன.

அதுவும் தற்போதைக்கு பெங்களூருவில் ஃபிளையிங் ஃப்ளே சி6 பைக்கை புக் செய்தவர்களுக்கு மட்டுமே டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு நகரமாக இந்த பைக்கின் டெலிவிரிகளை துவங்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளை போல் இல்லாமல், இது எலெக்ட்ரிக் பைக் என்பதால் இதற்கான சேல்ஸ் & சர்வீஸ் என எல்லாமே மாறுப்படும்.

royal enfield flying flea c6 electric bike deliveries

இதனாலேயே அவற்றை கவனிக்க தனியாக ஃபிளையிங் ஃப்ளே என்கிற பிராண்டை நிறுவியதுடன், எலெக்ட்ரிக் பைக்கை சர்வீஸ் செய்வதற்காக தனியாக சர்வீஸ் மையங்களையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிறுவி வருகிறது. அதன்படி, பெங்களூருவில் BTM லே-அவுட் பகுதியில் ஃபிளையிங் ஃப்ளே சி6 பைக்கை பழுதுப் பார்ப்பதற்கான சர்வீஸ் செண்டர் திறக்கப்பட்டுள்ளது.

ஃபிளையிங் ஃப்ளே சி6 எலெக்ட்ரிக் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஸ்டோர்ம் பிளாக் மற்றும் ஃப்ளே க்ரீன் என்கிற இரு கலர் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.79 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதுவே BaaS ஆப்ஷனில் வாங்கினால் இந்த பைக்கின் விலை வெறும் ரூ.1.99 லட்சம் மட்டுமே ஆகும்.

BaaS ஆப்ஷனில் பைக்கிற்கான பேட்டரியை மாதசந்தா திட்டத்தில் பெற வேண்டியிருக்கும். அதாவது, பேட்டரியில் இருந்து பயன்படுத்திய சார்ஜ் அளவிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஃபிளையிங் ஃப்ளே சி6 பைக்கில் பொருத்தப்படும் 15.4 கிலோவாட்ஸ் PMSM எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 20.3 பிஎச்பி மற்றும் 60 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்க 3.9kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 154கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என சான்றளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிஜ உலகில் இந்த அளவிற்கான ரேஞ்சை பெற முடியாது என்றாலும், 100-இல் இருந்து 110கிமீ அளவிற்கான ரேஞ்சை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃப்ளே சி6 பைக்கின் முக்கிய சிறப்பம்சமே வெறும் 124 கிலோவில் அதன் மிகவும் குறைவான எடையாகும். இத்தகைய எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளதால், இன்னும் சில நாட்களில் இதனை சாலைகளில் காணலாம். இருப்பினும், இன்னமும் நமது சென்னையில் ஃபிளையிங் ஃப்ளே சி6 பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்படவில்லை.

Article Published On: Saturday, June 20, 2026, 11:26 [IST]
English summary
Royal enfield flying flea c6 electric bike deliveries starts in bengaluru
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out