ராயல் என்ஃபீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் வெளியானது.. விலை என்ன தெரியுமா?

தங்களது முதல் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. ஃபிளையிங் ஃபிளியே (Flying Flea) பிராண்டின் கீழ் C6 எலெக்ட்ரிக் பைக் மாடலை இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் பைக்காக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரூ.2.79 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக் வெளியாகியுள்ளது.

இந்த வெளியீடு மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடும் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமாகவும் ஆகியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்தியாவில் நிறைய எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. ஆனால் அனைத்துமே புதிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுபவையாகவே இருக்கின்றன.

Flying Flea C6

வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே நன்கு பரீட்சியமான நிறுவனமாக எலெக்ட்ரிக் பைக்கை வெளியிடும் முதல் நிறுவனமாக ராயல் என்ஃபீல்டே இருக்கிறது. இது இந்த எலெக்ட்ரிக் பைக் மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும். புதிய ஃபிளையிங் ஃபிளியே C6 எலெக்ட்ரிக் பைக்கில் ராயல் என்ஃபீல்டு கொடுத்திருக்கும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பேட்டரி பேக், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்சு:

புதிய C6 எலெக்ட்ரிக் பைக்கில் 3.91 kWh பேட்டரி பேக்கைக் கொடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இத்துடன் இந்த பைக்கில் 15.4 kW (20.6 hp) பவர் மற்றும் 60 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பின் உதவியுடன் சிங்கிள் சார்ஜில் 154 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக்.

Flying Flea C6

இந்த பைக்கில் பெர்மனன்ட் மேக்னட் சின்கிரானஸ் மோட்டாரைக் கொடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. பெல்ட் டிரைவ் மூலம் பவர் ரியர் வீல்களுக்குக் கடத்தப்படுகிறது. இந்த பைக்கானது 0-60 கிமீ வேகத்தை 3.7 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பேட்டரி பைக்கை 0-100% வரை 2.16 மணி நேரத்திலும், 20-80% வரை 1.05 மணி நேரத்திலும் சார்ஜ் செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். பார்த்தவுடனேயே இது எரிபொருள் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட எடை குறைவான பைக் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த எலெக்ட்ரிக் பைக்கானது சுமார் 124 கிலோ எடையைக் கொண்டுள்ளது. சீட் உயரம் 823 மிமீ இருந்தாலும், ஸ்லிம்மாக இருப்பதால் குறைவான உயரம் கொண்டவர்களும் எளிதாக கால்களை கீழே வைக்க முடியும் வகையில் இருக்கிறது.

207 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டிருப்பதால், எந்த விதமான பாதைகளையும் எளிதாகக் கடக்கும். அட்வென்சர் பயணங்களைக் கூட இந்த பைக் மூலம் மேற்கொள்ள முடியும், கிரௌண்டு கிளியரன்ஸ் அடிப்படையில். பெரிய வட்ட வடிவ 3.5 இன்ச் TFT டிஸ்பிளே பிரதானமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பைக்கிற்கு ஒரு கிளாஸியான லுக்கையும் கொடுக்கிறது. சிட்டி, ரெயின், ஹைவே, ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என ஐந்து ரைடிங் மோடுகள் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.2.79 லட்சம் என்பது மிக அதிக விலை தான். ராயல் என்ஃபீல்டின் 350 சிசி மற்றும் கொரில்லா 450-யை விட அதிக விலை. எனவே தான் இந்த எலெக்ட்ரிக் பைக்குடன் வாடகை பேட்டரி (BaaS - Battery as a Service) திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்த வாடகை பேட்டரி திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இந்த பைக்கை வாங்க முடியும். பேட்டரிக்கான தொகையை பயன்பாட்டிற்கான கட்டணத்துடன் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் வகையில் இருக்கும்.

முதற்கட்டமாக பெங்களூருவில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இதனைத் தொடர்ந்து மற்ற மெட்ரோ நகரங்களுக்கு ஒவ்வொரு கட்டமாக விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. சென்னையில் விரைவில் இதன் விற்பனையை நாம் எதிர்பார்க்கலாம். நாளை (ஏப்ரல் 10) முதல் இந்த பைக்கிற்கான டெஸ்ட் டிரைவ் பெங்களூருவில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ப்ரீமியமான, தனித்துத் தெரியும் வகையிலான, தனித்துவமான பைக் அல்லது எலெக்ட்ரிக் பைக் வேண்டும் என்பவர்கள் இந்த ஃபிளையிங் ஃபிளியே C6 பைக்கை தேர்ந்தெடுக்கலாம். எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் புதிதாக நுழைந்திருப்பதால், தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் பைக் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்கலாம் என நினைக்கிறது ராயல் என்ஃபீல்டு. அதனாலேயே முதற்கட்டமாக ஒரு நகரத்தில் மட்டுமே இதன் விற்பனையை தொடங்கவிருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் ஸ்கூட்டர்கள் இல்லாமல் பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஃபிளையிங் ஃபிளியேவை வாங்கலாம். மேலும், ராயல் என்ஃபீல்டின் வரவைத் தொடர்ந்து மற்ற முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு மற்றும் விற்பனையில் களமிறங்கலாம். ஏற்கனவே பல நிறுவனங்கள் திரைமறைவில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ராயல் என்ஃபீல்டு இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2026, 18:34 [IST]
English summary
Royal enfield flying flea c6 electric bike launched in india check all details here
மேலும்... #royal enfield #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+