ஓலாவை விட சிறந்ததா முதல் RE எலெக்ட்ரிக் பைக்? மொத்த இந்தியாவும் இது தெரியாம வாங்க துடிக்குது!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இதற்காகவே ஃபிளையிங் ஃப்ளீ (Flying Flea C6) என்கிற பிராண்டை அறிமுகம் செய்து அதில் முதல் மாடலாக சி6 (C6)-ஐ ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மார்க்கெட்டில் நேரடி போட்டி எதுவும் தற்போதைக்கு இல்லை.

ஏனெனில், அந்த அளவிற்கு ஒரு வித்தியாசமான பழமையான ரெட்ரோ மற்றும் மாடர்ன் தோற்றம் கலந்த கலவையாக, சற்று பிரீமியம் தரத்திலான எலெக்ட்ரிக் பைக்காக இது களமிறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தொகுப்பில் நாம் ஒரு வித்தியாசமான ஒப்பீட்டை பார்க்க போகிறோம். அது என்னவென்றால், ஃபிளையிங் ஃப்ளீ சி6 பைக்கிற்கும், ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ (Ola Roadster X+) எலெக்ட்ரிக் பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை ஆகும்.

royal enfield flying flea c6 vs ola roadster x

விலை: விலையில் இருந்து முதலில் ஆரம்பிப்போம். ஃபிளையிங் ஃப்ளீ சி6 எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.2.79 லட்சமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ஆனால், BaaS ஆப்ஷனில் இந்த பைக்கை ரூ.1.99 லட்சத்தில் வாங்கலாம். ஃபிளையிங் ஃப்ளீ சி6 ஆனது ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுப்பக்கம், ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,09,999-இல் இருந்து ஆரம்பிக்கிறது. அதிகப்பட்சமாக இதன் விலை ரூ.1.40 லட்சம் வரையில் செல்கிறது. இந்த ஓலா எலெக்ட்ரிக் பைக்கிற்கும், ராயல் என்ஃபீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக்கிற்கும் (BaaS ஆப்ஷனில் வாங்கினாலும்) விலையில் சுமார் ரூ.90 ஆயிரம் வரையில் வித்தியாசம் உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை, இதன்பின் ஒவ்வொரு ஒப்பீடாக பார்க்க உங்களுக்கே தெரியவரும்.

royal enfield flying flea c6 vs ola roadster x

தோற்றம் & ஸ்டைல்: ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக் உடன் ஒப்பிடுகையில் ஃபிளையிங் ஃப்ளீ சி6 ஆனது மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் உள்ளதை கூறியே ஆக வேண்டும். சி6 பைக்கின் தோற்றம் ஆனது இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ஃபிளையிங் ஃப்ளீ பைக்கின் விண்டேஜ் தோற்றத்தை ஒத்து காணப்படுகிறது. அதற்கேற்ப, இரும்பிலான சஸ்பென்ஷன் ஃபோர்க் செட்-அப், சிங்கிள்-பீஸில் இருக்கை உடன் சைக்கிள் போன்று மெல்லியதான தோற்றத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மறுப்பக்கம், ரோட்ஸ்டர் எக்ஸ்+ ஆனது இன்றைய கால எலெக்ட்ரிக் பைக்குகளின் ஷார்ப்பான லைன்கள், நேர்த்தியான புரோஃபைல் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற டிசைன் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இதனால், எடை குறைவான பைக்கான ஃபிளையிங் ஃப்ளீ சி6-ஐ விட ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கின் ஏரோடைனமிக்ஸ் பண்பு சிறப்பாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

மோட்டார் & பேட்டரி: ஃபிளையிங் ஃப்ளீ சி6 பைக்கில் 15.4 கிலோவாட்ஸ் திறனை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார், 3.91kWh பேட்டரி உடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 154 கிமீ வரையிலான பயணத்தை பெறலாம். அதுவே, ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் 4.5kWh மற்றும் 9.1kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை 11 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகின்றன.

Features Motorcycle Flying Flea C6 Ola Roadster X+
Battery Pack 3.91 kWh 9.1/4.5 kWh
Maximum Range 154 Km Up to 500 Km
Peak Power 15.4 kW 11 kW
Top Speed 115 km/h 125 km/h
0-40 km/h 2.5-3 seconds 2.7 Seconds
20-80% Charging Time 65 Minutes 8/5.9 hrs
Battery Warranty - 3Yrs/50,000 kms

பரிமாண அளவுகள்: இந்த ஓலா எலெக்ட்ரிக் பைக்கை விட ஃபிளையிங் ஃப்ளீ சி6 ஆனது 74 மிமீ நீளம் குறைவானது. ஆனால், ரோட்ஸ்டர் எக்ஸ்+ கூடுதல் உயரம் கொண்டதாக உள்ளது. இருப்பினும், அகலத்தில் இவை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உயரம் அதிகம் கொண்டதாக இருப்பினும், ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் தரையில் இருந்து ரைடர் இருக்கை குறைந்த உயரத்தில் உள்ளது. ஏனெனில், ஃபிளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து உயரமாக வழங்கப்பட்டுள்ளது.

Dimensions & Weight Motorcycle Flying Flea C6 Ola Roadster X+
Length 2089 mm 2015 mm
Width 831 mm 831 mm
Height 1122 mm 1235 mm
Seat Height 823 mm 777 mm
Ground Clearance 207 mm 180 mm
Wheelbase 1366 mm 1306 mm
Kerb Weight 124 Kg 148.3 Kg (9.1 kWh)

பாதுகாப்பு அம்சங்கள்: ஏற்கனவே கூறியதுபோல், ஃபிளையிங் ஃப்ளீ சி6 பைக்கில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு பழமையான சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பின்பக்கத்தில் மாடர்னான மோனோ-ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கை தான் ஓலா வழங்குகிறது.

Chassis & Hardware Motorcycle Flying Flea C6 Ola Roadster X+
Chassis Lightweight aluminium Double Steel Cradle Frame
Front Suspension Girder Linkage Type Telescopic
Rear Suspension Mono-shock Twin Shock
Wheels 19 Inch Alloys 18/17 Inch Alloy
Tyres 90/90-19, 90/90-19 Tubeless 80/100-18, 110/80-17 Tubeless
Braking 260/220 mm Disc Disc/Drum

தொழிற்நுட்ப அம்சங்கள்: இந்த இரு எலெக்ட்ரிக் பைக்குகளிலும் அட்வான்ஸான தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஃபிளையிங் ஃப்ளீ சி6 பைக்கில் கூடுதலாக டிஎஃப்டி கன்சோல் திரை, வயர்லெஸ் சார்ஜிங், ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அதேநேரம், ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் ரைடிங் மோட்கள், பிரேக்-பை-வயர் டெக்னாலஜி, அட்வான்ஸான ரீஜெனரேட்டிவ் பிரேக், ரிவர்ஸில் செல்லும் வசதி, மொபைல் செயலி இணைப்பு வசதி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட மாடர்ன் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

Technology & Features Motorcycle Flying Flea C6 Ola Roadster X+
Lighting Round LED Headlamp and Tail Setup LED Setup
Display & Console 3.5 inch Colour TFT Console 4.3 inch Colour LCD / Touch Screen Speedo
Charging Features 27W USD PD Charger / Wireless Phone Charging Hypercharging Support
Safety & Control Dual Channel ABS (Switchable), Lean Angle Sensing ABS, Traction Control, Electronic Handlebar Lock Brake by Wire, Reverse Mode, Advanced Regen
Connectivity & Smart Tech Share My Status, Location Button, Remote Tip Over Alert Ola Electric App, Energy Insights, OTA Updates, Cruise Control
Riding Modes - Sport, Normal, Eco
Build Hardware Magnesium Battery Casing -

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃப்ளீ சி6 ஆனது ராயல் என்ஃபீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக் என்கிற அடையாளத்துடன் வந்திருந்தாலும், இதன் தோற்றம் அன்றாட பயன்பாட்டிற்கு எந்த அளவிற்கு ஏற்றதாக இருக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. பழமையான கிளாசிக் தோற்றத்தில் இளைஞர்களை கவரும் வகையில் மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளை கொண்டிருந்தாலும், அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கு எலெக்ட்ரிக் பைக்கை தேடுபவர்களுக்கு ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ ஏற்றதாக இருக்கும் என்பது தற்போதைக்கு எங்களது கருத்தாகும். இந்த பைக்கின் விலையும் குறைவாக இருப்பது இதன் மற்றொரு பிளஸ் பாயிண்ட் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 19:25 [IST]
English summary
Royal enfield flying flea c6 vs ola roadster x plus electric bikes comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+