எல்லாரும் வாங்கக்கூடிய மலிவான விலையில் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்! இந்த 5 அம்சங்களுக்காகவே புக்கிங் போடலாம்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் ஹண்டர் 350 (Hunter 350) மோட்டார்சைக்கிளில் புதியதாக விலை குறைவான 'பிரீமியம்' (Premium) என்கிற வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹண்டர் 350 பைக்கின் ஏற்கனவே உள்ள எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான ரெட்ரோ (Retro) மற்றும் மிட் வேரியண்ட்டான மெட்ரோ (Metro)-க்கு மத்தியில் புதிய பிரீமியம் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் அதிநவீன அம்சங்களான அலாய் சக்கரங்கள் போன்றவற்றை குறைந்த விலையில் வழங்கும் விதமாக புதிய பிரீமியம் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் உள்பட புதிய ஹண்டர் 350 பிரீமியம் வேரியண்ட் பைக்கின் மற்ற சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அலாய் சக்கரங்கள் & ட்யூப்லெஸ் டயர்கள்: புதிய விலை குறைவான பிரீமியம் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான அம்சம், அலாய் சக்கரங்கள் ஆகும். ஹண்டர் 350 பைக்கின் விலை குறைவான வேரியண்ட்களில் ஸ்போக் சக்கரங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய பிரீமியம் வேரியண்ட்டில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய அலாய் சக்கரங்களுடன், ட்யூப்லெஸ் டயர்கள் இந்த புதிய வேரியண்ட்டில் கிடைக்கும். இவை அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பை குறைப்பதுடன், பஞ்சராகினால் எளிதாக மாற்றக் கூடியதாக, அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்காக ஹண்டர் 350-ஐ விளங்க வைக்கின்றன.
அப்கிரேடான ஸ்டைல் & சவுகரியம்: அலாய் சக்கரங்களுடன் கிடைப்பதினாலேயே புதிய பிரீமியம் வேரியண்ட் பார்ப்பதற்கு ஸ்டைலாக உள்ளது. அத்துடன், வெள்ளை நிற கிராஃபிக்ஸ் (Graphics) உடன் தார் கருப்பு நிறத்தில் ஹண்டர் 350 பைக்கின் இந்த புதிய வேரியண்ட் கிடைக்கும். இவற்றுடன், மேம்பட்ட சவுகரியத்தை வழங்கக்கூடியதாக தையலிடப்பட்ட இருக்கை மற்றும் ஸ்போர்டியான பிளவுப்பட்ட கிராப் ரெயில் உள்ளிட்டவையும் இந்த புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

ஓட்டுபவரை கவரும் அம்சங்கள்: பைக்கை ஓட்டுபவரை கவரும் வகையில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் சுழலற்றக்கூடிய ஸ்விட்ச் கியர் (Switchgear) உள்ளிட்டவை புதிய பிரீமியம் வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன. இதில் சுழற்றக்கூடிய ஸ்விட்ச் கியர் ஆனது ஹண்டர் 350 பைக்கின் மெட்ரோ வேரியண்ட்டில் இருந்து வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது புதிய பிரீமியம் வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் (Slip & Assist Clutch): ஹண்டர் 350 பைக்கின் ரெட்ரோ வேரியண்ட்டில் கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டு வரும் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் இந்த புதிய வேரியண்ட்டில் ஸ்டாண்டர்டான அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய க்ளட்ச் சிஸ்டத்தினால் க்ளட்ச்சை பயன்படுத்த வேண்டிய தேவை கிட்டத்தட்ட 30% குறைகிறது. இதனால் இந்த க்ளட்ச் சிஸ்டம் ஆனது அடிக்கடி நிறுத்தி நிறுத்தி பைக்கை ஓட்ட வேண்டியிருக்கும் போக்குவரத்து நெரிசலான சாலைகளில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பாதுகாப்பு: நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் பைக்கை பாதுகாப்பாக ஓட்டுவதற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் (Single-channel ABS) வழங்கப்பட்டுள்ளது. இது முன் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள 300மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள 153மிமீ டிரம் பிரேக் உடன் இணைந்து செயல்படும். ட்யூயல்-சேனல் (Dual-channel) ஏபிஎஸ்-ஐ வழங்கி பைக்கின் விலையை அதிகமாக நிர்ணயிக்காமல் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐ வழங்கி பாதுகாப்பு மற்றும் விலை என இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையை ராயல் என்ஃபீல்டு பராமரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விலை மற்றும் எடை குறைவான மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 நாடு முழுவதும் கஸ்டமர்களை பெற்று வருகிறது. இத்தகைய பைக்கில் புதியதாக விலை குறைவான வேரியண்ட், பிரீமியம் தரத்திலான அம்சங்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, ஹண்டர் 350 பைக்கை மேலும் பல்வேறு விதமான வாடிக்கையாளர்களிடம் கொண்டுப்போய் சேர்க்கும் என்பது உறுதி. புதிய ஹண்டர் 350 பிரீமியம் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








