அடிமாட்டு விலையில் புது பைக்கை களமிறக்கிய ராயல் என்பீல்டு... இனி அவங்களை யாரும் அடிச்சுக்கவே முடியாது...
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளிலேயே மிகவும் விலை குறைவானது (Most Affordable Royal Enfield Bike) என்ற பெருமையை ஹண்டர் 350 (Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (Variant) விலை வெறும் 1,37,640 ரூபாயாக மட்டுமே உள்ளது.
இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கில் தற்போது புதிய வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் 'செகண்ட் பேஸ்' வேரியண்ட்டாக இது இருக்கும். அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட்டிற்கு அடுத்த வேரியண்ட்டாக இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வேரியண்ட்டில் அப்டேட் செய்யப்பட்ட ஹாலேஜன் ஹெட்லேம்ப், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் அலாய் வீல்கள் கிடையாது.
இதன் மூலம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் வேரியண்ட்களிலேயே, அலாய் வீல்கள் உடன் கிடைக்கும் மிகவும் விலை குறைவான வேரியண்ட் என்ற பெருமையை, தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வேரியண்ட் பெற்றுள்ளது. அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதியையும் இந்த வேரியண்ட் கொண்டுள்ளது.

எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணம் செய்வது சுலபமாக இருக்கும். டார்மக் பிளாக் என்ற ஒரே ஒரு கலர் ஆப்ஷனில் மட்டுமே இந்த வேரியண்ட் கிடைக்கும். இதன் விலை 1,49,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 12,260 ரூபாய் மட்டுமே அதிகம்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த வேரியண்ட் ஆக இருப்பதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கில் புதிய வேரியண்ட்டை சேர்த்திருப்பதுடன் மட்டுமல்லாது, டாப் வேரியண்ட்டில் 2 புதிய கலர் ஆப்ஷன்களையும் (Colour Options) அறிமுகம் செய்துள்ளது.
அவை மும்பை யெல்லோ மற்றும் மூன்சூட் ஒயிட் ஆகியவை ஆகும். இந்த 2 கலர் ஆப்ஷன்களின் விலையும் 1,69,804 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட் அப்டேட்களை தவிர, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், வேறு எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே 20.2 பிஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 349 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன்தான் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் தொடர்ந்து கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில், தற்போது புதிய வேரியண்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இனி வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








