இருக்கறதுலேயே விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் இதான்! பெட்ரோல் தீந்துட்டா தள்ளீட்டு கூட போகலாம்! வெயிட் கம்மி

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக் தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் இந்திய சந்தையில் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Royal Enfield Hunter 350 Mumbai Yellow

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 21,947 ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 18,109 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 3,838 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 21 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் ஹண்டர் 350 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Royal Enfield Hunter 350 Moonshot White

இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 ஆகிய பைக்குகள் உள்ளன. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படடது. இந்த பைக், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.38 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு 2 மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள் உள்ளன. இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் என்பது முதல் ப்ளஸ் பாயிண்ட் ஆகும். எனவே அனைத்து தரப்பினராலும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை வாங்க முடியும்.

மறுபக்கம் அனைத்து தரப்பினராலும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை இயக்க முடியும் என்பதுதான் இதன் 2வது ப்ளஸ் பாயிண்ட் ஆகும். ஏனெனில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் எடை சுமாராக வெறும் 180 கிலோ மட்டுமே. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் எடை குறைவான பைக் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

Article Published On: Tuesday, May 19, 2026, 22:50 [IST]
English summary
Royal enfield hunter 350 sales report april 2026 21 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+