தரமட்டத்துக்கு இறங்கிய ராயல் என்பீல்டு! அடிமாட்டு விலையில் 350 சிசி பைக்! போட்டி நிறுவனங்களை கதற விட்டுட்டாங்க
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் (Most Affordable Royal Enfield Bike In India) என்ற பெருமையை ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) வைத்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20,654 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 13,744 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 6,910 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் 50.28 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles December 2025) ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் 10வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 9 இடங்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஷைன் (Honda Shine), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe), டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache), பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ஹோண்டா யுனிகார்ன் (Honda Unicorn), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350), டிவிஎஸ் ரைடர் (TVS Raider) உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1,37,640 ரூபாயாக மட்டுமே உள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஃபேக்டரி பிளாக் கலர் ஆப்ஷன் இந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபக்கம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 1,66,883 ரூபாயாக மட்டுமே உள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ரீபெல் ப்ளூ, லண்டன் ரெட் மற்றும் டோக்கியோ பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்கள் இந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மிட் வேரியண்ட்களாக கருதப்படும் க்ராபைட் க்ரே, டேப்பர் க்ரே மற்றும் ரியோ ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் 1,62,292 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் ஒரு ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து. இது ஓட்டுவதற்கு மிகவும் எளிமையான பைக் என்பது, இதன் மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








