சேம்சங் செல்போனை விட குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக்! போலீஸ் பாதுகாப்பு போட்ற அளவுக்கு ஷோரூம்ல கூட்டம்!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் (Most Affordable Royal Enfield Bike) ஆகும்.
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20,234 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 16,599 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதாவது இம்முறை 3,635 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் 21.90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் மிகவும் விலை குறைவானது என்பதுதான் இந்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விலை கலர் ஆப்ஷன்களை (Colour Options) பொறுத்து மாறுபடும். இதன்படி இந்த பைக்கின் ஃபேக்டரி பிளாக் கலர் ஆப்ஷனின் விலை வெறும் 1.38 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பெறுகிறது.
இது சேம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) செல்போனை விட விலை குறைவானது ஆகும். சேம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த செல்போனின் விலை (256 GB | 12 GB மாடல்) 1.40 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் டேப்பர் க்ரே, க்ராபைட் க்ரே மற்றும் ரியோ ஒயிட் கலர் ஆப்ஷன்களின் விலை 1.62 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த வரிசையில் இந்த பைக்கின் ரீபெல் ப்ளூ, லண்டன் ரெட் மற்றும் டோக்கியோ பிளாக் கலர் ஆப்ஷன்களின் விலை 1.67 லட்ச ரூபாயாக உள்ளது.
இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் ஜே சீரிஸ் 349 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பைக்கில் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், 'ஷார்ட்' ஆன வீல்பேஸை கொண்டுள்ளது. அத்துடன் இதன் எடையும் மிகவும் குறைவு. எனவே சிட்டி அல்லது ஹைவே என எதுவானாலும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் அமர்க்களப்படுத்தும். அதே நேரத்தில் உகந்த சூழல்களில் இந்த பைக்கிடம் இருந்து 36.2 கிலோ மீட்டர் மைலேஜை (Mileage) எதிர்பார்க்கலாம் என ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்கையும் இந்த பைக் கொண்டுள்ளது. எனவே ஒரு முறை முழுமையாக எரிபொருள் டேங்க்கை நிரப்பி விட்டால், 470.6 கிலோ மீட்டர் மைலேஜை எதிர்பார்க்கலாம். ஆனால் ஓட்டும் விதம், பைக் மற்றும் சாலையின் கண்டிஷன் போன்ற அம்சங்களை எல்லாம் பொறுத்து, இந்த மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில், கையாள்வதற்கு எளிமையான, அதே நேரத்தில் ஓரளவிற்கு நல்ல மைலேஜ் வழங்க கூடிய ஒரு ரோட்ஸ்டர் ரக பைக்கை எதிர்பார்த்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








