வெறும் 1.38 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்! புல்லட், கிளாசிக் 350-னு எல்லாத்தையும் விட ரொம்ப கம்மி!
ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. மிகவும் விலை குறைவானது என்பதால், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 20,329 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 15,914 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 4,415 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 27.74 சதவீத வளர்ச்சி ஆகும்.
இது மிகவும் சிறப்பான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் சற்றே சரிவை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20,654 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின் வந்த ஜனவரி மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 20,329 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது 325 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 1.57 சதவீத வீழ்ச்சி ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.38 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பெறுகிறது.
இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.
இதில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.96 லட்ச ரூபாயாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை 58 ஆயிரம் ரூபாய் குறைவு. மறுபக்கம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.83 லட்ச ரூபாயாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை 45 ஆயிரம் ரூபாய் குறைவு.
அதே நேரத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.64 லட்ச ரூபாயாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை 26 ஆயிரம் ரூபாய் குறைவு. எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு பைக்குகளின் எடை பொதுவாக மிகவும் அதிகமாக இருக்கும். எனவே அவற்றை இயக்குவது சற்று கடினமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 இதற்கு அப்படியே நேர் எதிரானது.
குறைவான எடை மற்றும் சிறிய வீல்பேஸ் போன்ற அம்சங்கள், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை இயக்குவதற்கு மிகவும் எளிமையானதாக மாற்றுகின்றன. எனவே குறைவான விலையில், அதே நேரத்தில் இயக்குவதற்கு மிகவும் எளிமையான ஒரு ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








