இந்த அளவிற்கு குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் வரும்னு யாருமே எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பதற்கு 4 பைக்குகள்தான் மிக முக்கியமான காரணமாக உள்ளன. அவை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350), ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகியவை ஆகும்.

இதில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டைதான் (Sales Report) இந்த செய்தியில் பார்க்க போகிறோம். AUTO PUNDITZ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Royal Enfield Hunter 350 Moonshot White

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகின்றன. தற்போதைய நிலையில் இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் (Most Affordable Royal Enfield Bike) ஆகும்.

இதன் காரணமாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களிலேயே 1 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மிக பிரம்மாண்டமான மைல்கல்லை (Sales Milestone) ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கடந்தது.

Royal Enfield Hunter 350 Mumbai Yellow

அதாவது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்ளாகவே 1 லட்சம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து 5 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கடந்தது.

அதாவது 5 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை கடப்பதற்கு ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் வெறும் 29 மாதங்களை மட்டுமே (2022 ஆகஸ்ட் - 2025 ஜனவரி) எடுத்து கொண்டது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை வேகம் எந்த அளவிற்கு உள்ளது? என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே இந்த புள்ளி விபரங்களை வழங்கியுள்ளோம்.

இதற்கு அடுத்தபடியாக 1 மில்லியன், அதாவது 10 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை நோக்கி ராயல் என்பீல்டு ஹண்டர் 350 வீர நடை போட்டு வருகிறது. கூடிய விரைவிலேயே இந்த மைல்கல்லையும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கடந்து விடும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உறுதியாக நம்புகிறது.

ஏனெனில் ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் விதிவிலக்கு அல்ல. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 20,418 ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 15,972 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 4,446 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் 28 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதே வேகத்தில் சென்றால் கூடிய விரைவிலேயே 10 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லையும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கடந்து விடும். முன்னதாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கும் 10 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

6 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்லை ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம்தான் கடந்தது. எனவே கூடிய விரைவில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கும் 10 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடக்கலாம். ஆனால் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்தான் இந்த பிரம்மாண்டமான மைல்கல்லை முதலில் கடக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

ஏனெனில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை குறைவான பைக் ஆகும். தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1,37,640 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விலை குறைவானது மட்டுமல்ல. மிகவும் இலகுவானதும் கூட. அதாவது இதன் எடை மிகவும் குறைவு. எனவே இதை இயக்குவது மிகவும் சுலபம். ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

Article Published On: Tuesday, June 30, 2026, 16:02 [IST]
English summary
Royal enfield hunter 350 sales report may 2026 28 per cent growth most affordable re in india
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out