ஹண்டர் 350 vs XSR 155.. அடிப்படை வேரியன்டிலேயே அசத்தலான வசதிகளைக் கொண்டிருக்கும் பைக் இது தான்!

சமீபத்தில் தான் ஹண்டர் 350 பைக் மாடலை அப்டேட் செய்தது ராயல் என்ஃபீல்டு. இந்த அப்டேட்டில் அடிப்படையான 'பேஸ்' (Base) வேரியன்டிற்கு மேலாக 'பேஸ் ப்ரீமியம்' (Base Premium) என்ற புதிய வேரியன்டை வெளியிட்டது. இந்தப் புதிய வேரியன்டானது ரூ.1.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

யமஹா இந்தியாவில் விற்பனை செய்து வரும் 'XSR 155' ரெட்ரோ மாடல் பைக்கும் ரூ.1.50 லட்சம் என்ற தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தொடங்குகிறது. இன்ஜின் அளவைப் புறக்கணித்து விட்டு, விலை மற்றும் ரெட்ரோ டிசைன் அடிப்படையில் இந்த இரண்டு பைக் மாடல்களையும் போட்டியாளர்களாகக் கூற முடியும். இந்த இரண்டு மாடல்களில் எது சிறந்தது எனப் பார்க்கலாம்.

Royal Enfield Hunter 350

டிசைன்:

இரண்டு பைக்குகளுமே ரெட்ரோ டிசைனைக் கொண்டிருந்தாலும், ஹண்டர் 350 பைக்கான கிளாஸி ரெட்ரோ லுக்கையும், XSR 155 பைக்கானது மாடர்ன் ரெட்ரோ லுக்கையும் கொண்டுள்ளன. இரண்டுமே அதன் வகையில் தனித்துவமான மற்றும் சிறப்பான டிசைன்கள் தான். நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் விலையில், முழுமையான கருப்பு நிறத்தை ஹண்டரும், கிளாஸியான மெட்டாலிக் ப்ளூ நிறத்தை XSR-ம் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது XSR 155 சற்று ப்ரீமியமாகத் தெரிவதைத் தடுக்க முடியவில்லை.

பெர்ஃபாமன்ஸ்:

ஹண்டர் 350 பைக் மாடலில் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 20.2 hp பவர் மற்றும் 27 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Yamaha XSR 155

XSR 155 பைக்கில் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 18.1 hp பவர் மற்றும் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறைவான rpm-லேயே அதிக பவர் மற்றும் டார்க்கை ஹண்டர் உற்பத்தி செய்வதால் ரிலக்ஸ்டாக ரைடு செய்யலாம். அதிக rpm-ல் ஃபன்னான ரைடிங் செய்வதற்கு ஏற்ற பைக்காக XSR 155 இருக்கிறது. இரண்டுமே இருவேறு விதமான ரைடிங் அனுபவத்தைத் தரக்கூடியவை. பில்லியனுடன் ரைடு செய்தாலும் தொடக்கத்திலேயே ஹண்டர் 350 பைக்கில் நல்ல பிக்-அப் கிடைக்கும். XSR 155-ல் அதனை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதிகம் ரெவ் செய்யும் போது பறக்கும் அனுபவத்தை XSR 155 கொடுக்கும் என்பது மட்டும் உறுதி.

பிற அம்சங்கள்:

ஹண்டர் 350-யின் பேஸ் ப்ரீமியம் வேரியன்டில் இரண்டு பக்கமும் 17 இன்ச் அலாய் வீல்களைக் கொடுத்துள்ளது ராயல் என்ஃபால்டு. இத்துடன் முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியே ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உயர்நிலை வேரியன்ட்களிலேயே டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி இருக்கிறது.

XSR 155 பைக்கில் முன்பக்கம் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்டாக உள்ளது. இத்துடன் USD ஃபோர்க் மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய மேம்பட்ட அம்சங்களும் XSR 155 பைக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் வின்னர் XSR 155 தான்.

வசதிகள்:

ஹண்டர் 350 பைக்கில் அனலாக் டிஸ்பிளேவையே பிரதானமாகக் கொடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்த அனலாக் டிஸ்பிளேவிற்கு நடுவில் சிறிய டிஜிட்டல் இன்ஸர்ட்டைக் கொடுத்துள்ளது. இதில் எரிபொருள் அளவு, ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர்கள் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனுக்கு வசதியாக சிறிய ட்ரிப்பர் நேவிகேஷன் பாடு ஒன்று சிறியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

XSR 155 பைக்கில் பெரிய நெகடிவ் LED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பீடுமீட்டர், டேகோமீட்டர் உள்ளிட்ட அனைத்து தேவைப்படும் அம்சங்களையும் இந்த டிஸ்பிளேவின் நாம் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி மட்டும் இல்லை. ஹண்டர் 350 முறையான ரெட்ரோ மாடலாக இருக்கும் நிலையில், XSR 155 வசதிகள் நிறைந்ததாக இருக்கிறது.

எது சிறந்த பைக்?

ரூ.1.50 லட்சம் பட்ஜெட்டில் இந்த இரண்டு பைக்கில் எதனை தேர்ந்தெடுக்கலாம் என்றால், அது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. மிகவும் ஸ்போர்ட்டியான, அக்ரஸிவ்வான, 'க்விக்'கான பைக் வேண்டும் என்றால் XSR 155 நல்ல சாய்ஸாக இருக்கும். இதுவே ஸ்போர்ட்டியாக அதே நேரத்தில் கிரௌண்டடான ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் என்பவர்கள் ஹண்டர் 350 பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.

இன்ஜின் மற்றும் பெர்ஃபாமன்ஸைத் தவிர்த்து விட்டு மற்ற வகைகளில் பார்க்கும் போது மேம்பட்ட பைக் மாடலாக XSR 155-யே இருக்கிறது. ஹண்டர் 350 பைக்கின் உயர்நிலை வேரியன்ட்களிலேயே அட்ராக்ட்டிவ்வான நிறங்கள் மற்றும் மேம்பட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் XSR 155-ல் நாம் பார்க்கும் அடிப்படை வேரியன்டே அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கிறது. இரண்டுமே அதனதன் வகையில் சிறந்த பைக்குகள் தான். எனவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அம்சங்களைக் கொண்டிருக்கும் பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட் மிகவும் முக்கியம் என்பவர்கள் XSR 155 பைக்கையே தேர்ந்தெடுக்கலாம் என்பது டிரைவ்ஸ்பார்க்கின் கருத்தாக இருக்கிறது. நாம் கொடுக்கும் ரூ.1.50 லட்சத்திற்கு மேலான வசதிகளையே XSR 155 பைக் கொண்டுள்ளது. மேலும், நல்ல மைலேஜ் தரும் ஒன்றாகவும் இதன் இன்ஜின் இருக்கிறது. ஹண்டர் 350-யுடன் ஒப்பிடும் போது பராமரிப்புச் செலவும் குறைவு.

எனவே பைக்கை வாங்கிய பின்பான செலவுகளின் அடிப்படையில் XSR 155 சிறந்த தேர்வாக எங்கள் கண்களுக்குத் தெரிகிறது. பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் இரண்டையும் ஒருசேர அளிக்கக்கூடிய பைக் மாடல்கள் இந்தியாவில் சில மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக இந்த XSR 155-யும் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2026, 13:18 [IST]
English summary
Royal enfield hunter 350 vs yamaha xsr 155 base variants comparison
மேலும்... #royal enfield #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+