பழைய என்ஃபீல்டு பைக்கிற்கு இந்த சின்ன செலவு பண்ண யோசிக்காதீங்க! பெட்ரோல் பங்க்கிற்கு தைரியமா போகலாம்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தனது நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு ஒரு பயனுள்ள தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ராயல் என்ஃபீல்டின் பழைய பிஎஸ்3 (BS3) மற்றும் பிஎஸ்4 மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்கள், இ20 (E20) எரிபொருளால் ஏற்படும் அரிப்பு மற்றும் ரப்பர் சீல் பிரச்சனைகளைத் தீர்க்க, இப்போது இ20 இணக்கமான கார்பரேட்டரை நிறுவலாம்.

இதுகுறித்த விபரங்களை பற்றி பார்பதற்கு முன்னர், இ20 எரிபொருள் என்றால் என்ன என்பதை பற்றி சிறு குறிப்பாக பார்போம். இ20 என்பது எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோல் ஆகும். அதாவது, எத்தனால் 20 சதவீதமும், பெட்ரோல் மூலக்கூறுகள் 80% கலக்கப்பட்டது இ20 பெட்ரோல் எனப்படுகிறது. இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடிவதால், இ20 பெட்ரோல் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

royal enfield e20 retrofit kits for older bs3 and bs4 motorcycles

ஆரம்பத்தில் 10% எத்தனால் கலக்கப்பட்டு பெட்ரோல் பங்க்களில் விநியோகிக்கப்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களாக இது 20% அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களில் பழுதுகள் ஏற்படுவதாகவும், மைலேஜ் (Mileage) குறைவதாகவும் சில வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக, குளிர் காலத்தில் வாகனத்தை ஸ்டார்ட் செய்வதிலும், வாகனத்தை டிராஃபிக்கில் நிறுத்தி நிறுத்தி ஓட்டுவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, என்ஜின் சீரற்ற முறையில் இயங்குவதாகவும், எரிபொருள் கசிவுகள் ஏற்படுவதாகவும் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். இ20 பெட்ரோலில் அதிக எத்தனால் மூலக்கூறுகள் இருப்பதே இந்தச் சிக்கல்களுக்குக் காரணம் எனப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், மத்திய அரசு இந்த இயந்திரச் சிக்கல்கள் குறித்த தகவல்களை மறுத்துள்ளன.

royal enfield e20 retrofit kits for older bs3 and bs4 motorcycles

இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வேறு வழியின்றி 2023ஆம் ஆண்டில் இருந்தே தங்களது வாகனங்களை இ20 பெட்ரோலுக்கு ஏற்ப மாற்றி வருகின்றன. ஆதலால், இ20 பெட்ரோல் ஆனது முக்கியமாக பழைய பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 வாகனங்களில் தான் பிரச்சனையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே, ராயல் என்ஃபீல்டு தனது பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 பைக்குகளில் இந்த பிரச்சனைகளைத் தீர்க்க, கார்பரேட்டர் அசெம்பிளி (Carburettor Assembly), கேஸ்கெட்டுகள் (Gaskets), சீல்கள் (Seals)-ஐ இ20-க்கு இணக்கமான புதிய கூறுகளால் மாற்றிக்கொள்ள அழைத்துள்ளது.

இதன்படி, ராயல் என்ஃபீல்டின் பழைய பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 புல்லட் 350 (Bullet 350), கிளாசிக் 350 (Classic 350), தண்டர்பேர்ட் 350 (Thunderbird 350) பைக் உரிமையாளர்கள் இந்த மாற்றங்களை செய்துக் கொள்ளலாம். இதில், கார்பரேட்டருக்கு ரூ.3,000-ரூ.4,200 வரையிலும், சீல்கள்/காஸ்கெட்டுகள் ரூ.1,200-ரூ.1,800 வரையிலும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

royal enfield e20 retrofit kits for older bs3 and bs4 motorcycles

350சிசி பைக்குகளுக்கு மட்டுமில்லாமல், 500சிசி பைக்குகளுக்கும், ராயல் என்பீல்டு இ20 பெட்ரோலுக்கு இணக்கமான எரிபொருள் இன்ஜெக்டர்களை ரூ.2,500 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2009-2020ஆம் காலக்கட்டத்தில் விற்கப்பட்ட இ20 ஒவ்வாத பைக் மாடல்களுக்காக இது வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு, சில பழைய பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 மோட்டார்சைக்கிள்களுக்காக இ20 எரிபொருள் இணக்கத்தன்மை கொண்ட ரெட்ரோஃபிட் (Retrofit) கிட்டுகளையும் வழங்குகிறது.

இ20 ரெட்ரோஃபிட் கிட்டில் எத்தனால்-எதிர்ப்பு கூறுகள் உள்ளன. இதில் கிடைக்கும், மேம்படுத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய்கள், சீல்கள், ஓ-ரிங்குகள் (O-rings), ரப்பர் பாகங்கள் ஆகியவை அதிக எத்தனால் உள்ளடக்கத்தின் அரிக்கும் பண்புகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டின் பிஎஸ்4 மோட்டார்சைக்கிள்களுக்கான ரெட்ரோஃபிட் கிட்டின் விலை தோராயமாக ரூ.1,700 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எத்தனால் கலப்புக் கொண்ட பெட்ரோல் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இவ்வாறான மாற்றங்கள் முக்கியமானவை ஆகும். இந்த தீர்வுகள் அனைத்தும் கார்பரேட்டர் அடிப்படையிலான யூனிட் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ஜின் (UCE) கொண்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 2020 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்6 ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் ஏற்கனவே இ20 இணக்கமானவை; அவற்றுக்கு மாற்றம் தேவையில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, February 23, 2026, 22:47 [IST]
English summary
Royal enfield introduces e20 retrofit kits for older bs3 and bs4 motorcycles
மேலும்... #royal enfield #e20 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X