ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்த ராயல் என்ஃபீல்டு பைக் அறிமுகம்! ரொம்ப இல்ல, சில லட்ச ரூபாயில் வாங்கி விடலாம்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புதிய மேம்படுத்தப்பட்ட குரில்லா 450 (Guerrilla 450) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. கவுகாத்தியில் நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய குரில்லா 450 பைக்கில் அபெக்ஸ் (APEX) என்கிற வேரியண்ட் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான ஹிமாலயன் (Himalayan) பைக்கின் அடிப்படையிலான மோட்டார்சைக்கிளாக குரில்லா 450 கடந்த 2024 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹிமாலயன் ஆனது அட்வென்ச்சர் பயணங்களுக்கான மோட்டார்சைக்கிளாக விளங்கும் நிலையில், குரில்லா 450 ஆனது ஹிமாலயனின் தோற்றத்தில் சாதாரண சாலைகளுக்கு ஏற்ற பைக்காக கொண்டுவரப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்டு 1.5 வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், குரில்லா 450 பைக்கை ராயல் என்ஃபீல்டு அப்டேட் செய்து தற்போது அறிமுகம் செய்துள்ளது. முன்பு, அனலாக், டாஷ் மற்றும் ஃபிளாஷ் என மூன்று விதமான வேரியண்ட்களில் குரில்லா 450 பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, அதில் அனலாக் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக அபெக்ஸ் என்கிற புதிய வேரியண்ட்டை ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய அபெக்ஸ் வேரியண்ட் ஆனது முழுக்க முழுக்க ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Streetfighter) பைக் போன்றதான தோற்றத்தில் கிடைக்கும். புதிய அபெக்ஸ் வேரியண்ட்டை நகர்புறத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக தாழ்வான ரைடிங் பொசிஷனில், வழக்கமான சாலைகளுக்கு ஏற்ற டயர்கள் உடன் உருவாக்கியுள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இவற்றை எல்லாம் விட முக்கியமாக, குறைந்த விலையில் புதிய குரில்லா 450 அபெக்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய குரில்லா 450 பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.2,49,194-இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.2,72,479 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.2,49,194 விலையில் குரில்லா 450 பைக்கின் அபெக்ஸ் வேரியண்ட் சிவப்பு நிறத்திலும், டாஷ் வேரியண்ட் ட்விலைட் நீலம் நிறத்திலும் கிடைக்கும். அதாவது குறிப்பிடப்பட்ட நிறத்தில் இரண்டு வேரியண்ட்களின் விலைகளும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
புதிய குரில்லா 450 பைக்கின் அபெக்ஸ் வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், அலிமினியத்திலான ஹேண்டில்பார் உடன் ஏற்கனவே கூறியதுபோல் தாழ்வான ரைடிங் பொசிஷனை வழங்கக்கூடியதாகவும், 17 இன்ச்சில் வ்ரெடெஸ்டைன் செண்டுரோ எஸ்டி டயர்களை கொண்டதாகவும்,ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் என்கிற ரைடு மோட்களை கொண்டதாகவும், கவர்ச்சிக்கரமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.
மேலும், புதிய குரில்லா 450 அபெக்ஸ் பைக்கில் சக்கரங்களின் ரிம்களில் கலர் டேப்கள், செதுக்கப்பட்டது போன்றதான பின் இருக்கைக்கான கௌல் மற்றும் கலர் சேர்க்கப்பட்ட முன்பக்க கௌல் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. புதிய அபெக்ஸ் வேரியண்ட் உள்பட 2026 குரில்லா 450 பைக்கின் அனைத்து வேரியண்ட்களுக்கும் இன்று முதல் புக்கிங் (Booking) துவங்கப்பட்டுள்ளது.
புதிய அபெக்ஸ் வேரியண்ட் உள்பட 2026 குரில்லா 450 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் அப்டேட்டான ரைடு மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. டாஷ் வேரியண்ட்டில் ட்விலைட் நீலம் என்கிற கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் ரைடுகள் மார்ச் 31 முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குரில்லா 450 பைக்கின் டாஷ் மற்றும் ஃபிளாஷ் வேரியண்ட்டில் ரைடு மோட்களில் சில மாற்றங்கள், புதிய முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்ததை தவிர்த்து பெரியதாக எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து, புதியதாக அபெக்ஸ் என்கிற வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. குரில்லா 450 ஆனது ஹிமாலயன் 450 பைக் அளவிற்கு விற்பனையானது இல்லை. புதிய அபெக்ஸ் வேரியண்ட்டின் அறிமுகத்தினால் இந்த நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








