உலகையே மிரள விட்ட தமிழ்நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு! செல்போன் மாதிரி கணக்கே இல்லாம வித்துட்டு இருக்கு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350). ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜே-சீரிஸ் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் பைக் என்ற பெருமை மீட்டியோர் 350 பைக்கிற்கு உண்டு.
தற்போது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு கோவன் கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) போன்ற பைக்குகள் எல்லாம், ஜே-சீரிஸ் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 5 வருடங்கள் மற்றும் 4 மாதங்கள் ஆகின்றன.
ஆனால் அதற்குள்ளாகவே விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் கடந்துள்ளது. 6 லட்சம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல். இது ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் உலகளாவிய விற்பனை எண்ணிக்கை ஆகும். இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கானது, இந்தியாவில் மட்டுமல்லாது, லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் சார்க் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை போலவே, சர்வதேச சந்தைகளிலும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக், மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில், 349 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ட்ரிப்பர் நேவிகேஷன், எல்இடி லைட்கள், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள் போன்ற வசதிகளையும் (Features) ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஃபயர்பால் க்ரே மற்றும் ஃபயர்பால் ஆரஞ்ச் ஆகிய கலர் ஆப்ஷன்களின் விலை 1,95,762 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஸ்டெல்லர் மேட் க்ரே, ஸ்டெல்லர் மரைன் ப்ளூ கலர் ஆப்ஷன்களின் விலை 2,03,419 ரூபாயாக உள்ளது.
மறுபக்கம் அரோரா ரெட்ரோ க்ரீன் மற்றும் அரோரா ரெட் கலர் ஆப்ஷன்களின் விலை 2,06,290 ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் சூப்பர் நோவா ப்ளாக் கலர் ஆப்ஷனின் விலை 2,15,883 ரூபாயாக உள்ளது. இந்த வரிசையில் சன் டவுனர் ஆரஞ்ச் கலர் ஆப்ஷனின் விலை 2,18,882 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை, வாடிக்கையாளர்கள் தாங்கள் வழங்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதுகின்றனர். இதன் காரணமாகவே அதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 பைக் உலகளாவிய அளவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டிருப்பது, நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








