ராயல் என்ஃபீல்டின் சென்னை ஆலை ஓய்வே இல்லாமல் ஓடுது... 1 லட்சத்தை நெருங்கும் கஸ்டமர்ஸ் எண்ணிக்கை!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2026 மே மாதத்தில் மொத்தம் 94 ஆயிரத்து 115 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதில், பிரபலமான கிளாசிக் 350, புல்லட் 350 பைக்குகள் எத்தனை? விலையுயர்ந்த சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் ஷூட்கன் 650 பைக்குகள் எத்தனை? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 75 ஆயிரத்து 820 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு மே மாதத்தில் 94 ஆயிரத்து 115 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதாவது, 18 ஆயிரத்து 295 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் கடந்த மே மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 1 லட்சத்து 4 ஆயிரத்து 129 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், ஏப்ரலை காட்டிலும் மே மாதத்தில் 10 ஆயிரத்து 14 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் கிட்டத்தட்ட அனைத்து ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்களின் விற்பனையும் குறைந்துள்ளது.
வழக்கம்போல், கடந்த மே மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்காக கிளாசிக் 350 முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள கிளாசிக் 350 பைக்குகளின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 594 யூனிட்கள் ஆகும். ஆனால், 2025 மே மாதத்தில் வெறும் 28 ஆயிரத்து 628 கிளாசிக் 350 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை 20.84%, அதாவது 5,966 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஆனால், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 38 ஆயிரம் கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
கிளாசிக் 350 பைக்கிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு பைக்காக வழக்கம்போல் இரண்டாவது இடத்தை புல்லட் 350 பிடித்துள்ளது. இருப்பினும், கிளாசிக் 350 பைக்கை காட்டிலும் பெரும் இடைவெளி உடன், 23 ஆயிரத்து 372 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டதாக புல்லட் 350 விளங்குகிறது.
| Royal Enfield Model | May-26 | May-25 | Diff | Growth % YoY |
| Classic 350 | 34,594 | 28,628 | 5,966 | 20.84 |
| Bullet 350 | 23,372 | 17,279 | 6,093 | 35.26 |
| Hunter 350 | 20,418 | 15,972 | 4,446 | 27.84 |
| Meteor 350 | 8,360 | 7,697 | 663 | 8.61 |
| 650 Twin | 3,602 | 2,675 | 927 | 34.65 |
| Guerrilla 450 | 1,657 | 1,035 | 622 | 60.10 |
| Himalayan | 1,627 | 1,489 | 138 | 9.27 |
| Super Meteor | 404 | 851 | -447 | -52.53 |
| Shotgun | 81 | 194 | -113 | -58.25 |
| Total | 94,115 | 75,820 | 18,295 | 24.13 |
2025 மே மாதத்தில் வெறும் 17 ஆயிரத்து 279 புல்லட் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் 25 ஆயிரத்து 40 புல்லட் 350 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. புல்லட்டிற்கு அடுத்து ஹண்டர் 350 இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் 20 ஆயிரத்து 418 ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல், மீட்டியோர் 350 என்கிற 350சிசி பைக்கையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆனால், மீட்டியோர் 350 ஆனது கடந்த மாதத்தில் வெறும் 8 ஆயிரத்து 360 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
| Royal Enfield Model | May-26 | Apr-26 | Diff | Growth % MoM |
| Classic 350 | 34,594 | 37,967 | -3,373 | -8.88 |
| Bullet 350 | 23,372 | 25,040 | -1,668 | -6.66 |
| Hunter 350 | 20,418 | 21,947 | -1,529 | -6.97 |
| Meteor 350 | 8,360 | 10,060 | -1,700 | -16.90 |
| 650 Twin | 3,602 | 4,065 | -463 | -11.39 |
| Guerrilla 450 | 1,657 | 2,474 | -817 | -33.02 |
| Himalayan | 1,627 | 1,941 | -314 | -16.18 |
| Super Meteor | 404 | 493 | -89 | -18.05 |
| Shotgun | 81 | 142 | -61 | -42.96 |
| Total | 94,115 | 1,04,129 | -10,014 | -9.62 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரதானமான விற்பனை மாடல்களாக தற்போதைக்கு கிளாசிக் 350, புல்லட் 350 மற்றும் ஹண்டர் 350 பைக்குகள் உள்ளன. ஏனெனில், இவை மூன்று மட்டுமே 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகுகின்றன. கடந்த 2025 மே மாதத்தை காட்டிலும் கடந்த மே மாதத்தில் சூப்பர் மீட்டியோர் மற்றும் ஷூட்கன் பைக்குகள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications