நல்ல காரியத்துக்காக ராயல் என்ஃபீல்டு ஏற்பாடு செய்த பைக் பேரணி... சென்னையில் உற்சாகத்துடன் பங்கேற்ற ரைடர்கள்!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 125வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள நிலையில், உலக அளவில் மோட்டார்சைக்கிள் பிரியர்களை கொண்டு 'ஒன் ரைடு 2026' (One Ride 2026) என்ற சிறப்பு மோட்டார்சைக்கிள் பேரணியை நேற்று (செப்டம்பர் 20) மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தியது.

கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஒன் ரைடு பேரணியில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் மோட்டார்சைக்கிள் பிரியர்கள் கலந்துகொண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளனர். உலகளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில், 1,600க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த மோட்டார்சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் 1,50,000க்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

RE One Ride 2026 Chennai

இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒன் ரைடு நிகழ்வு வெறும் மோட்டார்சைக்கிள் பயணம் என்பதை தாண்டி, ஒரு உயரிய சுற்றுச்சூழல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. 'Every Rider. Every Road. One Mission' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு மோட்டார்சைக்கிள் பேரணி நிகழ்வை ராயல் என்ஃபீல்டு ஏற்பாடு செய்திருந்தது.

Also Read

இமயமலைப் பகுதியில் வாழும் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகளை (Snow Leopard) பாதுகாக்கும் நல்ல நோக்கத்தையும், இமயமலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியை வலியுறுத்தி இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உலக அளவில் பைக் ரைடர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வழங்கினர்.

image-oneride-8-600-56031789999006.jpg tamil.drivespark.com}

இதன் பகுதியாக, ஒன் ரைடு 2026 நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு மோட்டார்சைக்கிள் ரைடரின் சார்பாகவும், பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பு நிதிக்காக குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உறுதி தெரிவித்துள்ளது. இந்தியாவில 718 பனிச்சிறுத்தைகள் மட்டுமே வாழும் சூழலில், இமயமலை பிராந்தியத்தின் இயற்கை சமநிலையைப் பாதுகாப்பதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் காட்டி வரும் அக்கறை மோட்டார்சைக்கிள் பிரியர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

Also Read

ஏற்கனவே ஹிமாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 10,500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் பனிச்சிறுத்தைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் பணிகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் சமூகப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு திட்டங்களும் அடங்கும்.

RE One Ride 2026 Chennai

இந்த ஆண்டுக்கான ஒன் ரைடு 2026 மோட்டார்சைக்கில் பேரணி நிறைவு பெற்ற நிலையில், வரும் அக்டோபர் 23 சர்வதேச பனிச்சிறுத்தைகள் தினத்தை (International Snow Leopard Day) முன்னிட்டு, உலக அளவில் பல்வேறு இடங்களில் நடந்த ஒன் ரைடு 2026 மோட்டார்சைக்கிள் பேரணி நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பை ராயல் என்ஃபீல்டு வெளியிட உள்ளது.

அன்றைய தினமே உலக அளவில் பேரணியில் கலந்துகொண்ட ரைடர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புக்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்க உள்ள மொத்த நிதி தொகை குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தனது சமூக நலப்பணிகளின் அங்கமாக இந்த முயற்சிகளை ராயல் என்ஃபீல்டு செய்து வருகிறது. சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரையிலும் ஒன்ரைடு 2026 பேரணி நேற்று நடந்தது. மேலும், டிரைவ்ஸ்பார்க் சார்பில் பெங்களூரில் நடந்த நிகழ்வில் பங்கேற்று ஆதரவு தரப்பட்டது.

Article Published On: Monday, September 21, 2026, 19:30 [IST]
English summary
Royal enfield one ride 2026 1 5 lakh riders snow leopard conservation
மேலும்... #royal enfield
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X