ஆடி, ஃபெராரியை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாட்டு பைக் நிறுவனம்! ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்திருக்கு

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டில் 1,02,930 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டில் வெறும் 76,957 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 34 சதவீதம் உயர்ந்திருப்பது நமக்கு தெரிய வருகிறது.

Royal Enfield Bullet 350

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 11,102 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 12,583 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி 12 சதவீதம் குறைந்துள்ளது. ஏற்றுமதி கை விட்டிருந்தாலும் கூட, உள்நாட்டில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பதால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) மிகவும் சிறப்பாக உள்ளது.

Royal Enfield Classic 350

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 1,14,032 பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 89,540 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்த விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில் சமீபத்தில் அந்நிறுவனம் இந்தியாவிற்கு பெருமை ஒன்றை தேடி தந்தது. பிராண்ட் ஃபைனான்ஸ் ஆட்டோமேட்டிவ் இன்டஸ்ட்ரீ 2026 ரிப்போர்ட் (Brand Finance Automotive Industry 2026 Report) சமீபத்தில் வெளியானது. இதில், உலகின் மிகவும் வலிமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பட்டியலில் (Strongest Automobile Brands), ராயல் என்பீல்டு நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் இடத்தில் டொயோட்டா (Toyota) நிறுவனமும், 2வது இடத்தில் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனமும் உள்ளன. இதை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. ஆடி (Audi), ஃபெராரி (Ferrari) மற்றும் போர்ஷே (Porsche) போன்ற நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது.

இந்த பட்டியலில் ஆடி நிறுவனத்திற்கு 4வது இடமும், ஃபெராரி நிறுவனத்திற்கு 7வது இடமும், போர்ஷே நிறுவனத்திற்கு 9வது இடமும் மட்டுமே கிடைத்துள்ளன. ராயல் என்பீல்டை போல் மற்றொரு இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இந்த பட்டியலில் சிறப்பான ஒரு இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 5வது இடம் கிடைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ கிளாசிக் பைக்குகளுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்வதுடன், மதிப்புமிக்க அங்கீகாரங்களையும், ராயல் என்பீல்டு நிறுவனத்தால் பெற முடிகிறது.

Article Published On: Sunday, July 5, 2026, 12:58 [IST]
English summary
Royal enfield registers 27 per cent growth in june 2026
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out