இஸ்ரேல்-ஈரான் போல் மோதி கொள்ள போகும் தமிழக-இங்கிலாந்து நிறுவனங்கள்! மார்க்கெட் ரணகளமா மாற போகுது!

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் பைக்குகளை விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில், ராயல் என்பீல்டு நிறுவனம் 91,248 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவின் உள்நாட்டு சந்தையில், வெறும் 80,799 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 13 சதவீத வளர்ச்சி ஆகும்.

Royal Enfield Bullet 350

உள்நாட்டு விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும் கூட, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி சற்றே சரிவை சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து 9,657 பைக்குகளை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து 9,871 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது 2 சதவீத வீழ்ச்சி ஆகும். ஏற்றுமதியில் சிறிய சரிவை சந்தித்திருந்தாலும் கூட, உள்நாட்டு விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பதால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) வளர்ச்சியடைந்துள்ளது.

Royal Enfield Classic 350

அதாவது ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 1,00,905 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 90,670 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்த விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு 'டிமாண்ட்' அதிகரித்து கொண்டே வருவதால், அந்நிறுவனம் தனது உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் (Tamil Nadu) திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தில் உள்ள செய்யாறு (Cheyyar) ஆலையின் உற்பத்தி திறனை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகரிக்கவுள்ளது.

இதற்காக 958 கோடி ரூபாயை ராயல் என்பீல்டு நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தற்போதைய ஒட்டுமொத்த உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 14.6 லட்சம் பைக்குகளாக உள்ளன. ஆனால் செய்யாறு ஆலையின் விரிவாக்க பணிகள் முடிவடைந்த பிறகு, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் பைக்குகளாக உயர்ந்து விடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு, அதன் 350 சிசி பைக்குகள்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. குறிப்பாக கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), புல்லட் 350 (Royal Enfield Bullet 350), ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனால் இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில் தற்போது இருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு கூடிய விரைவில் நெருக்கடி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ப் (Triumph) நிறுவனம், வரும் ஏப்ரல் மாதம், இந்திய சந்தையில் ஏராளமான 350 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் காரணமாக 350 சிசி செக்மெண்ட்டில் போட்டி கடுமையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 5, 2026, 17:45 [IST]
English summary
Royal enfield sales report february 2026 11 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+