தமிழ்நாட்டின் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க இதுதான் காரணமா!

தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் விதிவிலக்கு அல்ல. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் உள்நாட்டில் 94,115 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 75,820 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

Royal Enfield Classic 350

அதாவது இம்முறை இந்தியாவின் உள்நாட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 18,295 பைக்குகளை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 24 சதவீத வளர்ச்சி ஆகும். இந்தியாவின் உள்நாட்டில் விற்பனையில் வளர்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ராயல் என்பீல்டு பைக்குகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

அதாவது ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து 9,116 பைக்குகளை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 13,609 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.

Royal Enfield Hunter 350

அதாவது இம்முறை 4,493 பைக்குகள் குறைவாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 33 சதவீத வீழ்ச்சி ஆகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 1,03,231 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 89,429 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

அதாவது இம்முறை ஒட்டுமொத்தமாக 13,802 ராயல் என்பீல்டு பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 15 சதவீத வளர்ச்சி ஆகும். என்டிடிவி ஆட்டோ தளத்தில் வெளியாகியுள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை வெகுவாக உயர்ந்து கொண்டிருப்பதை இந்த சேல்ஸ் ரிப்போர்ட் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனம் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகே புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த தொழிற்சாலை சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே அமைக்கப்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளின் விற்பனை தற்போதே சிறப்பாகதான் உள்ளது. இந்த சூழலில் எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை மேலும் அதிகரிக்க போகிறது என்பது உறுதி. இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு நிறுவனம் ஆந்திராவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.

Article Published On: Tuesday, June 2, 2026, 22:44 [IST]
English summary
Royal enfield sales report may 2026 15 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out