ராயலான லுக்குடன் ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ள புதிய பைக்

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் என்றாலே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் தான். அதனை இன்னும் ஸ்பெஷலாக்கும் வகையில் சிறப்பு எடிஷன் பைக் மாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. தனித்துவமான ராயல் என்ஃபீல்டு பைக் வேண்டும் என்று கேட்பவர்கள் இதனை வாங்க 'முயற்சி செய்யலாம்'. ஆனால் அனைவருக்கும் கிடைக்காது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சில நேரங்களில் ஒரு பைக்கின் மதிப்பை உயர்த்தை சிறப்பு எடிஷன் மாடல்களை வெளியிடும். அப்படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தைவானைச் சேர்ந்த ரப் கிராஃப்ட்ஸ் (Rough Crafts) என்ற நிறுவனத்துடன் இணைந்து 'ஷாட்கன் 650 ரப் கிராஃப்ட்ஸ்' (Shotgun 650 Rough Craft) எடிஷனை வெளியிட்டுள்ளது.

Royal Enfield Shotgun 650 Rough Crafts Edition

பார்த்தவுடனேயே வாங்கத் தூண்டும் வகையிலான டிசைனுடன் இந்த சிறப்பு எடிஷன் மாடல் வெளியாகியிருக்கிறது. டிசைனில் மட்டும் தான் மாற்றமே தவிர, வசதிகளிலோ, மெக்கானிக்கல் அம்சங்களிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த சிறப்பு எடிஷன் பைக் பார்க்கும் போதே தனித்துவமான லுக்கை கொண்ட பைக்காக இருப்பது உங்களுக்குத் தெரியும்.

டிசைனில் என்ன மாற்றம்?

கிளாஸ் ஜெட் பிளாக் மற்றும் மேட் ஸ்டெல்த் பிளாக் என இரண்டு கருப்பு நிறங்கள் இந்த சிறப்பு எடிஷன் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு நிறங்களையும் பிரிக்கும் வகையில் கோல்டன் நிற கோடுகள் பைக் முழுவதும் நீள்கிறது. முன்பக்க ஃபெண்டரில் தொடங்கி, எரிபொருள் டேங்க், சைடு பேனல் மற்றும் பின்பக்க ஃபெண்டர் வரை நீள்கிறது இந்த கோல்டன் நிற கோடு.

Royal Enfield Shotgun 650 Rough Crafts Edition

இத்துடன் கண்களுக்குத் தெரியாத வகையில் சிறிய கிரே நிற கோடு ஒன்றும் உடனேயே நீள்கிறது. இத்துடன் தனித்துவமான புதிய டிசைனில் அலாய் வீல்கள் மற்றும் கோல்டன் நிறத்தில் முன்பக்க சஸ்பென்ஷன் டியூப் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. க்வில்டட் சீட்டும் உண்டு. கருப்பு நிற பார் எண்டு மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வழக்கமான ராயல் என்ஃபீல்டு லோகோவுக்குப் பதிலாக, ராயல் என்ஃபீல்டு மற்றும் ரப் கிராஃப்ட் இரண்டையும் குறிக்கும் வகையிலான ஸ்பெஷல் லோகோ எரிபொருள் டேங்கின் மீது பொருத்தப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் சேர்ந்து இந்த ஷாட்கன் 650 ரப் கிராஃப்ட் எடிஷனுக்கு ராயலான லுக்கைக் கொடுக்கின்றன. குறிப்பாக அந்த கோல்டன் நிறம் பைக்கின் டிசைனை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.

லிமிடட் எடிஷன்:

இதுவொரு சிறப்பு எடிஷன் பைக் மட்டும் கிடையாது, லிமிடட் எடிஷன் பைக்கும் கூட. உலகம் முழுவதும் விற்பனை செய்வதற்காக வெறும் 100 யூனிட்டுகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு தயாரிக்கவிருக்கிறது. அதில் 25 யூனிட்டுகள் மட்டுமே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே மேலே கூறியது போல இந்த பைக்கை வாங்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

இதனை ட்ராப் முறையில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதாவது விற்பனை தொடங்கி உடனேயே முதலில் யார் பணம் செலுத்தி முடிக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த பைக் கிடைக்கும். இந்தப் விற்பனையில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 30ம் தேதி வரை விற்பனையில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் ராயல் என்ஃபீல்டு செயலி அல்லது வலைத்தளப் பக்கம் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

இந்தியாவில் ஜூலை 30ம் தேதியன்று இரவு 7 மணிக்கு இந்த ஷாட்கன் 650 ரப் கிராஃப்ட்ஸ் சிறப்பு எடிஷன் பைக்கின் விற்பனை தொடங்குகிறது. விற்பனை தொடங்கியவுடன் முதலில் பணம் செலுத்தி முடிக்கும் 25 வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக் சொந்தமாகும். வெறும் 100 யூனிட்டுகள் என்பதால், ஒவ்வொரு பைக்கிலும் அது எத்தனையாவது பைக் என்ற எண் எரிபொருள் டேங்கின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும்.

என்ன விலையில் வெளியாகியுள்ளது?

எல்லாத்தையும் சொல்லிட்ட, விலைய சொல்லலயேப்பா என நீங்கள் கேட்பது கேட்கிறது. இந்த சிறப்பு எடிஷன் பைக்கை இந்தியாவில் 5.75 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யவுள்ளது ராயல் என்ஃபீல்டு. ஆன்-ரோடு விலை 6.50 லட்சம் ரூபாய்க்குப் பக்கத்தில் வந்துவிடும். ஷான்கன் 650 ஸ்டாண்டர்டு பைக்கின் டாப் எண்டு வேரியன்டே 4.16 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனை கலெக்டர்ஸ் எடிஷன் போலவே பாவித்து வெளியிடுகிறது ராயல் என்ஃபீல்டு. விலை சற்று அதிகமாக இருந்தாலும், உண்மையிலேயே இந்த சிறப்பு எடிஷன் பைக் தனித்துவமான லுக்கைக் கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. ராயல் என்ஃபீல்டு ஆர்வலர்களுக்கு இதுபோன்ற சிறப்பு எடிஷன் பைக்கை வாங்க இதுவொரு சிறப்பான தருணம். மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.

Article Published On: Thursday, July 16, 2026, 7:28 [IST]
English summary
Royal enfield shotgun 650 rough crafts edition launched in india
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out