நாளை அறிமுகமாகும் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்! ஹிமாலயனை விட குறைவான விலையில்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) அதன் குரில்லா 450 (Guerrilla 450) மோட்டார்சைக்கிளை 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. நாளை (மார்ச் 27) அறிமுகம் செய்யப்பட நிலையில், 2026 குரில்லா 450 பைக்கின் டீசர் (Teaser) தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் மூலம் 2026 குரில்லா 450 பைக்கை பற்றி நமக்கு தெரியவந்துள்ள கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று, ஹிமாலயன் (Himalayan) ஆகும். கரடு, முரடான அட்வென்ச்சர் பயணங்களுக்கு பலரும் விரும்பக்கூடிய மோட்டார்சைக்கிளாக ஹிமாலயன் விளங்குகிறது. இதனாலேயே, ஹிமாலயன் பைக் அடிப்படையில் பல புதிய பைக்குகளை ராயல் என்ஃபீல்டு கொண்டுவந்தது. அதாவது, அவை ஹிமாலயனின் தனி வேரியண்ட்களாக இருந்தன.

அவ்வாறு, ஹிமாலயனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான், குரில்லா 450 ஆகும். இன்னும் சொல்லப்போனால், ஹிமாலயனில் பொருத்தப்படும் அதே என்ஜின் தான் சிறிய மாற்றங்களுடன் குரில்லா 450 பைக்கில் பொருத்தப்படுகிறது. 2024 ஜூலையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட குரில்லா 450, 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்யப்படுகிறது.
குரில்லா 450 பைக்கை வாங்கிய கஸ்டமர்களின் கருத்துகளுக்கு ஏற்ப இந்த பைக் அப்கிரேட் செய்யப்படவுள்ளது. இதன்படி, பைக்கை பயன்படுத்துவதிலும், அதன் ஹேண்ட்லிங்கிலும் ஏதேனும் மேம்பாட்டுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்கள் இருக்குமா இருக்காதா என்பதை உறுதியாக கூற முடியாவிடினும், நிச்சயமாக பைக்கிற்கு புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

அதன்படி, குரில்லா 450 பைக்கிற்கு வழங்கப்பட்டுவரும் ட்யூயல்-டோன் பெயிண்ட்களின் நிறங்கள் மாற்றப்படலாம் மற்றும் புதியதாக மேட் ஃபினிஷ் (Matte Finish) அறிமுகம் செய்யப்படலாம். மேலும், ஏற்கனவே கூறியதுபோல் குரில்லா 450 பைக்கின் ஹேண்ட்லிங்கில் மேம்பாடுகள் கொண்டுவரப்படலாம். இதற்காக பைக்கின் பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன் (Monoshock Suspension) செட்-அப் திருத்தியமைக்கப்படலாம்.
ஏனெனில், குரில்லா 450 பைக்கை பயன்படுத்தும்போது மேடு, பள்ளங்களில் சில அசவுகரியங்கள் ஏற்படுவதாக சில கஸ்டமர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம், இந்த பைக்கின் விரைப்பான பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் என கூறப்படுவதால், அதனை ராயல் என்ஃபீல்டு மாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், புதிய குரில்லா 450 பைக்கில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்படலாம் (குறைந்தப்பட்சம் பைக்கின் டாப் வேரியண்ட்களில் ஆவது வழங்கப்படும்).
மேலும், தற்போதைய குரில்லா 450 பைக்கில் ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய ட்யூயல்-பர்பஸ் டயர்கள் வழங்கப்படுவதும் சில ஓனர்களால் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. ஏனெனில், இந்த டயர்கள் வளைவுகளில் திரும்பும்போது சில தடுமாற்றங்களை ஏற்படுத்துவதாக சில வாடிக்கயாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனை தவிர்க்கும் வகையில், முற்றிலுமாக ஆன்-ரோடு சாலைகளுக்கு ஏற்ற, கூடுதல் பிடிமானத்தை வழங்கக்கூடிய ரேடியல் டயர்கள் வழங்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றுடன், ஹேண்டில்பாருக்கு இரு பக்கமும் மிரர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், இரு திசைகளில் செயல்படும் குயிக் ஷிஃப்டர் போன்றவையும் புதிய குரில்லா 450 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. குறைந்தப்பட்சம் கூடுதல் ஆக்ஸஸரீகளாக ஆவது வழங்கப்படும். அறிமுகத்திற்கு முன்னதாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் மூலம் புதிய குரில்லா 450 பைக்கை முன்பை விட சாதாரணமான சாலைகளுக்கு ஏற்றதாக ராயல் என்ஃபீல்டு கொண்டுவருகிறது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








