இந்தாண்டு 5 புதிய பைக்குகளை இந்தியாவில் வெளியிடும் ராயல் என்ஃபீல்டு.. என்னென்ன பைக்குகள்னு தெரியுமா?

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அக்ரஸிவ்வாக புதிய பைக் மாடல்களை வெளியிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு. கடந்த 10 ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு என்றாலே புல்லட், கிளாஸிக் போன்ற ஒரு சில பைக் மாடல்கள் தான் என்ற நிலை மாறி தற்போது 10-க்கும் மேற்பட்ட பைக் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. பத்தாண்டுக்கு முன்பாக சில லட்சங்களில் இருந்த ராயல் என்ஃபீல்டின் விற்பனை, கடந்த நிதியாண்டு 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

இப்படி முன்பை விட வேகமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வளர்ந்து வரும் நிலையில், அந்த நிறுவனம் இந்தியாவில் 5 புத்தம் புதிய பைக் மாடல்களை நடப்பு நிதியாண்டில் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டு என்பது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, 2027 மார்ச் வரையிலான காலக்கட்டம். இந்த ஓராண்டிலேயே ஐந்து புதிய பைக் மாடல்களை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Royal Enfield Bullet 650

என்னென்ன பைக் மாடல்கள்?

முதலில் புல்லட் 650 பைக்கின் வெளியீட்டே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 650 சிசி பைக்கினை கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்விலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. எனவே ஏற்கனவே வெளியீட்டிற்குத் தயார் நிலையில் இருக்கும் இந்த பைக்கையே, வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ராயல் என்ஃபீல்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புல்லட் 650-யைத் தவிர்த்து, ஹிமாலயன் 440, ஸ்கிராம் 450, கான்டினென்டல் GT 750 மற்றும் ஹிமாலயன் 750 ஆகிய பைக் மாடல்களை இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் புதிய வெளியீடுகள் தவிர ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 13 பைக் மாடல்களை இந்தாண்டு அப்டேட் செய்யவும் இருக்கிறதாம்.

Royal Enfield Continental GT 650

இதில் நாம் மிகவும் எதிர்பார்ப்பது 750 சிசி பைக்குகளைத் தான். தற்போது அதிகபட்சமாக 650 சிசி வரையிலான பைக்குகளையே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வந்தது. புதிய ஹிமாலயன் 750 மற்றும் கான்டினென்டல் GT 750 ஆகிய பைக்குகள் மூலமாக 750 சிசி பிரிவிற்குள் நுழையவுள்ளது. இந்தியாவில் 500 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக்கை அனைவரும் வாங்கும் வகையில் ஆக்கியதே ராயல் என்ஃபீல்டு தான்.

அதன் 650 சிசி பைக்குகள் தான், ட்வின் சிலிண்டர் இன்ஜினுடன் அனைவரும் வாங்கும் வகையில் மிகவும் குறைவாக 3.50 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 4 லட்சம் ரூபாய் அதிகம் தான் என்றாலும், ட்வின் சிலிண்டர் இன்ஜினுடன் 650 சிசி இன்ஜினைக் கொண்டிருக்கும் மற்ற பைக்குகளுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவு தான்.

இந்த காரணத்தினாலேயே ராயல் என்ஃபீல்டின் புதிய 750 சிசி பைக்குகள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுபவையாக இருக்கின்றன. அதிலும் ஹிமாலயன் 750 பைக்கானது, ட்வின் சிலிண்டர் இன்ஜினுடன், சாமானியரும் வாங்கும் விலையிலான ப்ரீமியமான அட்வென்சர் பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்டினென்டல் GT 750 பைக்கிற்கும் வாடிக்கையாளர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

500 சிசி முதல் 800 சிசிக்குள்ளான பைக்குகள் பிரிவில் விற்பனையாகும் 90% பைக்குகள் ராயல் என்ஃபீல்டு பிராண்டைச் சேர்ந்தவை தான். அதிலும் கான்டினென்டல் GT 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய பைக்குகளுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. 650 சிசி பிரிவில் இந்த பைக்குகள் செய்து வரும் அதே மேஜிக் 750 சிசி பிரிவிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிமாலயன் 440 மற்றும் ஸ்கிராம் 450 ஆகிய பைக்குகளையும் எதிர்பார்க்கவே செய்கிறோம். ஹிமலாயன் 440 பைக் மீது, தற்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் 450 பைக்கை விட குறைவான விலையில் வெளியாகும் என்பதற்காக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஸ்கிராம் 450 பைக் மீது, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 452 சிசி இன்ஜின் மற்றும் அதன் ப்ரீமியம்னஸுக்காக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆக மொத்தம் இந்த ஆண்டு ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்கு விருந்து தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஐந்து பைக்குகளும் நடப்பு நிதியாண்டிற்கான வெளியீட்டு லைன்-அப் மட்டுமே. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு இன்னும் பெரிய திட்டங்கள் மற்றும் புதிய பைக் மாடல்களின் வெளியீடுகளையும் ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கிறது. மேலும் இங்கே நாம் பேசிக் கொண்டிருப்பது எல்லாம் எரிபொருள் பைக்குகளைப் பற்றி மட்டும் தான். அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லைன்-அப் வேறு தனியே இருக்கிறது. தீயாக வேலை செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக எடுத்துக் கொண்டுவிட்டது ராயல் என்ஃபீல்டு.

Article Published On: Thursday, May 7, 2026, 23:10 [IST]
English summary
Royal enfield to launch 5 new bike models in india this fy2027
மேலும்... #royal enfield #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+