அடிமாட்டு விலையில் புதிய பைக்கை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு.. என்ன பைக்னு தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு என்ற தங்களின் பிராண்டைக் கடந்த தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சில பைக் பைக் மாடல்களில் ஹிமாலயனும் ஒன்று. இப்போதிருக்கும் ஹிமாலயன் 450-யைப் பற்றிப் பேசவில்லை. இதற்கு முன்னர் விற்பனையில் இருந்த ஹிமாலயன் 411 பைக் மாடலே அத்தகைய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது. அதன் நீட்சியாகவே தற்போதைய ஹிமாலயன் 450 பைக் மாடல் விற்பனையில் இருக்கிறது.

முன்பை விட சிறப்பான பெர்ஃபாமன்ஸ், மேம்பட்ட வசதிகள் மற்றும் டிசைனிலும் பெரிய அளவிலான மாற்றங்களுடன் ஹிமாலயன் 450 வெளியானது. பைக் மேம்படும் போது விலையும் மேம்படத்தானே செய்யும். எனவே விலையும் அதற்கேற்பை அதிகமானது. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதைப் போல, ஏற்கனவே அதிகமாக விலையேறிக் கொண்டிருக்கும் பெரிய இன்ஜின் பைக்குகள் மீதான வரியை 40% ஆக உயர்த்தியது மத்திய அரசு.

Royal Enfield Himalayan 450

இதன் காரணமாக ஹிமாலயன் 450 பைக்கின் விலை தற்போது ரூ.3 லட்சத்தைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.3.06 லட்சம் முதல் ரூ.3.37 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போதைய ஹிமாலயன் 450 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் குறைவான விலையில் புதிய ஹிமாலயன் பைக் மாடலை வெளியிட ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராயல் என்ஃபீல்டிடம் தற்போது நான்கு இன்ஜின் பிளாட்ஃபார்கள் உள்ளன, 350 சிசி, 440 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி. இதில் 440 சிசி இன்ஜின் பிளாட்ஃபார்மில் ஸ்கிராம் 440 என்ற ஒரேயொரு பைக் மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறதே. இதே இன்ஜின் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி புதிய ஹிமாலயன் பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

Royal Enfield Himalayan 411 and Scram 440

மேலே கூறியது போல ஹிமாலயன் 411 பைக்கிற்கு இப்போதும் இந்தியாவில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அதே போன்ற டிசைனுடன், ஸ்கிராம் 440 பைக்கின் சேஸி, இன்ஜின் மற்றும் இதர அம்சங்களுடன் குறைவான விலையில் புதிய ஹிமாலயன் பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது.

25.4 hp பவர் மற்றும் 34 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 443 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு இன்ஜினை புதிய ஹிமாலயன் 440 பைக்கில் நாம் எதிர்பார்க்கலாம். ஸ்கிராம் 440 பைக்கில் இந்த இன்ஜின் தான் உள்ளது. ஹிமாலயன் 411 பைக்கின் 411 சிசி இன்ஜினைத் தான் 443 சிசியாக மறுவடிவமைப்பு செய்து ஸ்கிராம் 440 பைக்கில் ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தியது. தற்போது இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இன்ஜினைக் கொண்டு புதிய ஹிமாலயன் பைக்கை உருவாக்கி வருகிறது.

புதிய பைக்கிற்கான நிறைய அம்சங்களை ஸ்கிராம் 440 பைக்கில் இருந்து நேரடியாகவே பயன்படுத்த ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சில அம்சங்கள், உதாரணமாக சஸ்பென்ஷன் மற்றும் வீல்கள் ஆகியவை மட்டும் அட்வென்சர் பைக்கிற்கு ஏற்ற வகையில் இருக்கும். நீண்ட டிராவஸ் கொண்ட சஸ்பென்ஷன்கள், 21 இன்ச/17 இன்ச் வீல்கள் ஆகிய அம்சங்களை புதிய ஹிமாலயன் 440-யில் நாம் எதிர்பார்க்கலாம்.

ஸ்கிராம் 440 பைக்கானது தற்போது ரூ.2.23 லட்சம் முதல் ரூ.2.31 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய ஹிமாலயன் 440 பைக்கை ரூ.2.40 லட்சம் முதல் ரூ.2.60 லட்சத்திற்குள்ளான விலையில் ராயல் என்ஃபீல்டு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 பைக்கின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புல்லட் 350 பைக்கின் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.2 லட்சத்தைத் தொட்ட போது, அதனை விட குறைவான விலையில் ஹண்டர் 350 என்ற பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்தது ராயல் என்ஃபீல்டு. தற்போது அதே ஃபார்முலாவை ஹிமாலயன் பைக்கிற்கும் செயல்படுத்தவிருக்கிறது. உண்மையில் இது ஒரு சிறப்பான திட்டம் தான்.

மிகச்சிறப்பான வசதிகள் கொண்ட அட்வென்சர் பைக் மட்டுமே வேண்டும் என்னும் வாடிக்கையாளர்கள் தற்போதைய ஹிமாலயன் 450 பைக்கை தாரளமாக வாங்கலாம். ஆனால், பட்ஜெட்டில் இருந்தால் நன்றாக இருக்கும், வசதிகள் கொஞ்சம் குறைவான இருந்தாலும் பரவாயில்லை என்னும் வாடிக்கையாளர்கள் ஹிமாலயன் 440 பைக்கிற்கு செல்லலாம். உண்மையில் ஹிமாலயன் 411 பைக் (அதே இன்ஜின்) தான் மீண்டும் வருகிறது. இதனால் ஹிமாலயன் டீகிரேடு ஆகிறது என்று சொல்வதற்கான காரணம் ஏதுமில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 21, 2026, 19:38 [IST]
English summary
Royal enfield to launch low price himalayan 440 adventure bike model soon
மேலும்... #royal enfield #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+