அடிமாட்டு விலையில் வெளியான புதிய எலெக்ட்ரிக் மொபெட்.. இதை வாங்கலாமா கூடாதா?

பைக் மற்றும் ஸ்கூட்டரைத் தவிர்த்து இன்னொரு வகையான இருசக்கர வாகனமும் இந்தியாவில் முன்னர் மிகவும் பிரபலமாக இருந்தது. எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், மொபெட்களைப் பற்றித் தான. முன்னர் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிய சில மொபெட் மாடல்கள் விற்பனையில் இருந்து வந்தன. இப்போது டிவிஎஸ் XL என்ற ஒரேயொரு எரிபொருள் மொபெட் பைக் மட்டுமே விற்பனையில் உள்ளது.

XL-ஐ போலவே முன்பு லூனா என்ற மொபெட்டும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. கைனடிக் லூனா (Kinetic Luna) என்று சொன்னால் இன்னும் நன்றாகத் தெரியும். 1970-களில் இருந்தே விற்பனையில் இருந்த ஒரு மொபெட் மாடல் இது. இதன் எலெக்ட்ரிக் வடிவத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வெளியிட்டது கைனடிக் கிரீன் நிறுவனம். 'E லூனா' என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் மொபெட் இப்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kinetic E Luna

இந்த எலெக்ட்ரிக் மொபெடை இப்போது வாங்கலாமா, இது யாருக்கு சரியான வாகனமாக இருக்கும், இதன் சிறப்பம்சங்கள் என்ன ஆகிய தகவல்களை எல்லாம் இங்கே நாம் பார்க்கலாம். தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வடிவில் விற்பனையில் இருக்கும் சில மொபெட் மாடல்களில் இந்த கைனடிக் E லூனாவும் என்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எலெக்ட்ரிக் மொபெடை, கோ, பிளஸ், ப்ரோ மற்றும் ப்ரைம் என நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது கைனடிக் கிரீன. போதுமான வசதிகள் மற்றும் ஓகேவான பெர்ஃபாமன்ஸைக் கொண்ட மொபெடாக இருக்கிறது இந்த E லூனா. நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டாலும், முக்கியமான அம்சங்கள் எல்லாம் அனைத்து வேரியன்ட்களிலும் ஒன்று தான்.

Kinetic E Luna

இந்த மொபெடில் 1.8 kW (2.4 hp) பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 2.3 kWh பேட்டரி பேக் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பானது 110 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என கைனடிக் கிரீன் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் தினசரிப் பயன்பாட்டிற்கு போதுமான ரேஞ்சு மற்றும் பெர்ஃபாமன்ஸை இந்த E லூனா மொபெட் கொண்டிருக்கிறதா?

இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு பேரும் ஃப்ரீயாக அமரும் வகையில் இடவசதியைக் கொண்டிருந்தாலும், தினசரிப் பயன்பாட்டிற்கு இதன் எலெக்ட்ரிக் மோட்டாரின் பெர்ஃபாமன்ஸ் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் திறனையே இந்த எலெக்ட்ரிக் மொபெட் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவான வேகத்தில் க்விக்காக இருக்கும். ஆனால் இந்த E லூனா 25 கிமீ வேகத்தை எட்டுவதற்கே சற்று கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது.

இதனால் ஓவர்டேக் செய்வது கூட சற்று சிரமமானதாகவே இருக்கும். செயின் டிரைவ் எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டிருக்கும் நிலையில், அதுவும் பயன்பாட்டிற்கு அவ்வளவு ஏற்றதாக இல்லை. அடுத்ததாக ரேஞ்சு. 110 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது இந்த எலெக்ட்ரிக் மொபெட். ஆனால் உண்மையான ரேஞ்சு அதற்கு அருகில் கூட இல்லை. 65 கிமீ ரேஞ்சு கிடைப்பதே சிரமமாக இருப்பதாக பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

E லூனா போன்ற மொபெட்கள் சரக்கு ஏற்றுவதற்காகவே அதிகம் வாங்கப்படுகின்றன. சரக்கு ஏற்றிப் பயணிக்கும் போது இந்த ரேஞ்சு இன்னும் குறையவே வாய்ப்புகள் இருக்கிறது. எனவே வணிக ரீதியான பயன்பாட்டிற்கும் இந்த எலெக்ட்ரிக் மொபெட் ஏற்றதாக இருக்குமா என்று கூற முடியாது. பெர்ஃபாமன்ஸ் மற்றும் ரேஞ்சு என்ற முக்கியமான இரண்டு இடங்களிலேயே அவுட்டாகி விடுவதால் இதனை வாங்கலாம் என்று பரிந்துரைப்பது சிரமம் தான்.

எனினும் விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள கைனடிக் கிரீன் ஷோரூம்களில் இந்த E லூனாவை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். 69,990 ரூபாய் முதல் 84,590 ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த E லூனா எலெக்ட்ரிக் மொபெடை விற்பனை செய்து வருகிறது கைனடிக் கிரீன் நிறுவனம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்படி இருந்தாலும் மொபெட் தான் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது டிவிஎஸ் XL. அதனை விட சிறந்த மொபெட் இந்தியாவில் இருந்து விட முடியாது. மேலும் ஒவ்வொரு மாதமும் இன்றும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் XL-ஐ வாங்கி விருக்கிறார்கள். E லூனா மொபெட் இப்போதைய நிலையில் வாங்குவதற்கு ஏற்றதாக இல்லை. இதில் இருக்கும் பிரச்சினைகளைக் கைனடிக் கிரீன் களைந்தால் பின்னர் பரிசீலிக்கலாம்.

Article Published On: Saturday, May 30, 2026, 8:56 [IST]
English summary
Should you buy kinetic e luna electric moped for daily use case in india
மேலும்... #kinetic #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out