அதிக ரேஞ்சை வாரி வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இதனை வாங்கலாமா? வேண்டாமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என நிறைய வாடிக்கையாளர்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எரிபொருள் ஸ்கூட்டர்களையே வாங்கவேன் என அடம்பிடிக்கும் சில வாடிக்கையாளர்கள் கூட அதன் ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தால் கவரப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால் டிவிஎஸ்ஸின் ஐக்யூப் ஸ்கூட்டரையும் பரிந்துரையில் வைத்திருப்பீர்கள். 1.10 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நாம் இங்கே பார்க்கவிருப்பது பெரிய பேட்டரி பேக் கொண்ட டாப் எண்டு ஐக்யூப் ST வேரியன்டைப் பற்றி.

TVS iQube

ஐந்து விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன், ஐந்து வேரியன்ட்களாக ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் கொடுக்கும் அனைத்து விதமான தொழில்நுட்ப அம்சங்கள், வசதிகள் மற்றும் அதிக ரேஞ்சு கொண்ட ஒரு வேரியன்ட் இருக்கிறது என்றால் அது டாப் எண்டான ஐக்யூப் ST 5.3 kWh வேரியன்ட் தான்.

அனைத்து விதமான அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என்னும் போது விலையும் அதிகமாகவே இருக்கும். 1.72 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (சென்னை) விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் எண்டு வேரியன்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரின் பெரிய பேட்டரி பேக்கை 4.18 மணி நேரத்தில் 0-80% வரை சார்ஜ் செய்ய முடியும். தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே சற்று வேகமான சார்ஜிங் நேரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

TVS iQube

இதன் 5.3 kWh பேட்டரி பேக்கானது 212 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. தினசரி பயன்பாட்டில் 120 கிமீ முதல் 180 கிமீ வரையிலான ரேஞ்சை நாம் பெற முடியும். இது ஸ்கூட்டரை நாம் எப்படி ஓட்டுகிறோம், எந்த மோடில் ஓட்டுகிறோம் என்பதைப் பொறுத்தது. இந்த ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எக்கோ (Eco) மற்றும் பவர் (Power) என இரண்டு ரைடிங் மோடுகளை டிவிஎஸ் கொடுத்திருக்கிறது.

எக்கோ மோடிலேயே அதிக ரேஞ்சை நாம் பெற முடியும். மேலே கூறியது போல 180 கிமீ வரையிலான ரேஞ்சைக் கூடப் பெறலாம். ஆனால் எக்கோ மோடில் மணிக்கு 50 கிமீக்கும் கீழான வேகத்திலேயே நாம் பயணிக்க முடியும். நகரங்களுக்குள் இது ஓகே தான், ஆனால் நெடுஞ்சாலைகளுக்குப் போதாது. பவர் மோடில் ரேஞ்சு குறைவாகக் கிடைக்கும். ஆனால் மணிக்கு 82 கிமீ வரையிலான வேகத்தில் நாம் பயணம் செய்ய முடியும்.

இந்த டாப் எண்டு வேரியன்டில் ரிவர்ஸ் மோடு, USB சார்ஜிங் போர்ட், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய TFT டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வசதிகள் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பயன்பாட்டு அனுபவத்தை பெரிய அளவில் மேம்படுத்த உதவுகிறது.

770 மிமீ சீட் உயரம் மற்றும் 132 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது ஐக்யூப். சீட் உயரம் ஓகே தான், ஆனால் எடை கொஞ்சம் அதிகம். பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹேண்டில் செய்வது எளிதாக இருக்கிறதா என்பதைப் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து விட்டு பின்பு வாங்குவது பரிசலீக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்போதுமே பவர் மோடிலேயே ஓட்டினாலும் நகரங்களுக்குள் ஓட்டும் போது போதுமான ரேஞ்சு கிடைப்பதாவே பல வாடிக்கையாளர்களும் கூறியிருக்கிறார்கள். எனவே உங்களது பயணத் திட்டம் எப்படியிருக்குமோ அதற்கு ஏற்ற அளவிலான ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர் இந்த டிவிஎஸ் ஐக்யூப் தான். அதில் அதிக ரேஞ்சைக் கொண்டிருப்பது ST 5.3 kWh வேரியன்ட் தான்.

Article Published On: Sunday, May 17, 2026, 11:00 [IST]
English summary
Should you buy tvs iqube top end st variant is it worth the price we are paying
மேலும்... #tvs #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+