வாங்கி போட்டால் 5 வருஷத்துக்கு எந்த கவலையும் இருக்காது! இந்த மார்ச் மாதத்திலேயே வாங்கினால்தான் உண்டு!

சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் அதன் வாகனங்களுக்கு கூடுதலாக இரண்டு வருடங்களுக்கான உத்தரவாதத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உத்தரவாதத்துடன் கூடுதலாக இரண்டு வருடங்களுக்கான உத்தரவாதத்தையும் இலவசமாக பெறலாம் என சிம்பிள் எனர்ஜி அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பெங்களூருவில் இருந்து பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், சிம்பிள் எனர்ஜி ஆகும். சிம்பிள் ஒன் என்கிற தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் மார்க்கெட்டில் கவனத்தை பெற்ற நிறுவனமாக சிம்பிள் எனர்ஜி விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்சமயம் நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

simple energy electric scooter warranty

இவை அனைத்திற்கும் தான் தற்போது குறுகிய கால சலுகையாக கூடுதல் 2 வருடங்களுக்கான உத்தரவாதத்தை இலவசமாக வழங்குவதாக சிம்பிள் எனர்ஜி அறிவித்துள்ளது. குறுகிய கால சலுகை என ஏன் கூறுகிறோம் என்றால், இந்த சலுகை ஆனது இந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. அப்படிப் பார்த்தால், இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.

சிம்பிள் எனர்ஜியின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 வருடங்களுக்கான உத்தரவாதம் ஆனது ஸ்டாண்டர்ட் ஆக வழங்கப்படுகிறது. அதாவது, வாகனத்தை வாங்கினாலே அதன் விலையில் 3 வருடங்களுக்கான உத்தரவாதமும் அடங்குகிறது. 3 வருடங்கள் போதாது, இன்னும் கூடுதலாக 2 வருடங்கள் தேவை என நினைப்பவர்களுக்கு ரூ.6,489 மதிப்பில் 2 வருடங்களுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டு வந்தது.

simple energy electric scooter warranty

அதாவது, ஸ்கூட்டரின் விலையுடன் சேர்த்து கூடுதலாக ரூ.6,489ஐ செலுத்தினால் 3 வருடங்கள் + 2 வருடங்கள் என மொத்தம் 5 வருடங்களுக்கான உத்தரவாதத்தை பெற முடிந்தது. ரூ.6,489 மதிப்பிலான இந்த கூடுதல் 2 வருடங்களுக்கான உத்தரவாதத்தை தான் தற்போது சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குறுகிய காலத்திற்கு இலவசமாக அறிவித்துள்ளது.

கூடுதல் 2 வருடங்களுக்கான உத்தரவாதம் மட்டுமில்லாமல், 5 வருடங்களுக்கான உத்தரவாதத்தையும் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு வழங்கி வருகிறது. 5 வருடங்களுக்கான உத்தரவாதத்தை தேர்வு செய்பவர்கள் மீதி 3 வருட உத்தரவாதத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும், கூடுதல் 5 வருடங்களுக்கான உத்தரவாதத்தை பெற்று வாகனத்திற்கு மொத்தம் 8 வருடங்களுக்கான உத்தரவாதத்தை பெறலாம்.

இவை இல்லாமல், 'சிம்பிள் சூப்பர் புரோடெக்ட்' (Simple Super Protect) என்கிற பெயரில் வாகனத்தின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 வருடங்கள் மற்றும் 80 ஆயிரம் கிமீ-க்கான உத்தரவாதத்தையும் சிம்பிள் எனர்ஜி வழங்கி வருகிறது. ரூ.8,499 என்கிற கட்டணத்தில் வழங்கப்படும் இந்த சிம்பிள் சூப்பர் புரோடெக்ட் உத்தரவாதத்தை சலுகையாக இலவசமாக வழங்குவது தொடர்பான எந்த விபரமும் இல்லை.

சிம்பிள் எனர்ஜியில் இருந்து விற்பனை செய்யப்படும் சிம்பிள் ஒன் ஜென் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4.5kWh மற்றும் 5kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. சிம்பிள் எனர்ஜியின் விலைமிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் அல்ட்ரா (Ultra) 400கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மத்திய அரசாங்கத்தின் ரூ.5,000 மானியம் ரத்து செய்யப்படுவதால், முடிந்தவரையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த மார்ச் மாதத்திலேயே விற்பனை செய்ய சிம்பிள் எனர்ஜி இந்த சலுகையை அறிவித்துள்ளது. ஏனெனில், வருகிற ஏப்ரல் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகளை ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கஸ்டமர்களின் எண்ணிக்கை குறையும் என்பது சிம்பிள் எனர்ஜிக்கு தெரியும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 27, 2026, 16:13 [IST]
English summary
Simple energy announces limited period warranty offers check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+