400 கிமீ ரேஞ்சு கொடுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனை 200 சதவீதம் உயர்வு!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஏத்தர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுக்கும் மேலாக புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. அப்படியான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் சிம்பிள் எனர்ஜி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.

கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூன் மாதம் 210 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் இந்தியாவில் வெறும் 440 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஜூன் மாதம் இந்த அளவு 1,365 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது. இந்த விற்பனை அளவுடன் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சந்தையின் 0.70 சதவீதம் சந்தைப் பங்குகளையும் அந்நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

Simple One S

மேலும், இந்தியாவில் விற்பனையின் அடிப்படையில் டாப் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் மேற்கண்ட விற்பனை அளவுடன் பத்தாவது இடத்தில் உள்ளது சிம்பிள் எனர்ஜி. இந்தியாவில் தற்போது சிம்பிள் ஒன் எஸ், சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் அல்ட்ரா என மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம்.

ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் என்றாலும், இந்தியாவில் அதிக ரேஞ்சு கொண்ட மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருவதில் சிம்பிள் எனர்ஜி தான் முதலிடத்தில் உள்ளது. ஆம், இதன் சிம்பிள் அல்ட்ரா (Simple Ultra) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இந்தியாவிலேயே அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது.

Simple Ultra electric scooter

சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 6.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கின் உதவியுடன் 400 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. 250 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சாதாரணமாக நாம் பெறலாம்.

அதிக ரேஞ்சு கொண்ட ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்னும் போது விலையும் சற்று அதிகமாகத் தானே இருக்கும். அந்த வகையில் இந்த டாப் எண்டு சிம்பிள் ஒன் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் தற்போது 2.35 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது சிம்பிள் எனர்ஜி.

சிம்பிள் ஒன் எஸ் (Simple One S) தான் சிம்பிள் எனர்ஜியின் லைன்-அப்பில் மிகவும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். 1.65 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த தொடக்கநிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தொடக்கநிலையிலேயே விலை சற்று அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ப சிறப்பம்சங்களையும் இந்த சிம்பிள் ஒன் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 3.7 kWh பேட்டரி பேக்கானது 190 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வழக்கமான பெட்ரோல் பைக் அல்லது ஸ்கூட்டரைப் போலவே ரேஞ்சு பயம் இல்லாமல் இந்த சிம்பிள் ஒன் எஸ் ஸ்கூட்டரை நாம் பயன்படுத்தலாம். சிம்பிள் ஒன் எஸ்ஸின் பேட்டரியை 0-80 சதவீதம் வரை 4 மணி நேரத்திலேயே சார்ஜ் செய்து விட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைய முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் தான் தற்போது சிம்பிள் எனர்ஜி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க விற்பனையுடன், பேர் சொல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக சிம்பிள் எனர்ஜி வருவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. அதனைத் தான் இந்த விற்பனை உயர்வு சுட்டிக் காட்டுகிறது.

Article Published On: Thursday, July 2, 2026, 12:43 [IST]
English summary
Simple energy electric scooter sales explode to 210 percent this june
மேலும்... #simple energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out