இப்போ இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்குத் தான் ஹெவி டிமாண்டு.. ஷோரூம்ல கூட்டம் அலைமோதுது!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னணியில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுடன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கூட அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. அப்படியான ஒரு நிறுவனமாக சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது சிம்பிள் எனர்ஜி.

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமானது, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த மார்ச் மாதம் 128.25% வரை கூடுதல் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாவும் இருந்து வருகிறது.

Simple One EV

இந்தியாவில் தற்போது சிம்பிள ஒன் (Simple One) மற்றும் சிம்பிள் ஒன் எஸ் (Simple One S) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது சிம்பிள் எனர்ஜி. விரைவில் மேம்பட்ட அம்சங்கள் கொண்ட சிம்பிள் அல்ட்ரா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 1,744 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. மேலே கூறியது போல இது 128.25% விற்பனை வளர்ச்சியாகும். இந்த எண்ணிக்கையும், இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைப் பட்டியலில் பிகாஸ் ஆட்டோவுக்கு அடுத்தபடியாக ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது சிம்பிள் எனர்ஜி.

Simple One electric scooter

இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர்களில் சிம்பிள் ஒன் எஸ் தான் சற்று விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. இதனை ரூ.1.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது சிம்பிள் எனர்ஜி. 190 கிமீ வரையிலான ரேஞ்சையும், மணிக்கு 90 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தையும் கொண்டிருக்கிறது இந்த ஒன் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

அடுத்ததாக கூடுதல் அம்சங்கள் மற்றும் சற்று கூடுதல் விலையுடன் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலானது ரூ.1.77 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலானது 265 கிமீ வரையிலான ரேஞ்சையும், அதிகபட்சமாக 115 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. இதில் தங்களுக்கான இடத்தைத் தக்க வைக்க, புதிய நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் என அனைத்தும் போட்டியிட்டு வருகின்றன. தற்போது டிவிஸ், பஜாஜ், ஏத்தர் எனர்ஜி மற்றும் ஹீரோ விடா ஆகிய நிறுவனங்களே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன.

அவற்றைத் தொடர்ந்து கிரீவ்ஸ் மொபிலிட்டி, ரிவர் மொபிலிட்டி, பிகாஸ் ஆட்டோ மற்றும் சிம்பிள் எனர்ஜி ஆகியவை தற்போது வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கின்றன. வரும் மாதங்களில் இன்னும் அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை சிம்பிள் எனர்ஜி பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ப்ரீமியமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே, அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் ரூ.1 லட்சத்தை ஒட்டிய விலையில் புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டதையும் சிம்பிள் எனர்ஜி வைத்திருக்கிறது. வரும் மாதங்களில் இந்தப் புதிய ஸ்கூட்டரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது சிம்பிள் எனர்ஜிக்கு தேவைப்படும் விற்பனை எண்ணிக்கையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாவே சிம்பிள் எனர்ஜியின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் சிம்பிள் எனர்ஜியுடையதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குறைவான நகரங்களிலேயே செயல்பட்டு வருகிறது சிம்பிள் எனர்ஜி. அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் பட்சத்தில் இதன் விற்பனை அளவு நிறையவே உயர வாய்ப்புகள் இருக்கிறது.

Article Corrections

தலைப்பில் ஸ்கூட்டருக்கு மாற்றாக 'ஸ்கட்டர்' என தவறாக இருந்தது. தற்போது மாற்றப்பட்டு விட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 2, 2026, 15:36 [IST]
English summary
Simple energy electric scooter sales surged 128 percent this march check all details here
மேலும்... #simple energy #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+