265 கிமீ ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இப்போ எங்க வேணா வாங்கலாம்.. இந்தியா முழுவதும் விரிவுபடுத்தல்

இந்தியாவில் தங்களுடைய ஷோரூம்களை மேலும் ஐந்து நகரங்களில் விரிவுபடுத்தியிருக்கிறது சிம்பிள் எனர்ஜி. பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இந்தியாவில் மேம்பட்ட, அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. புதிய ஷோரூம்களுடன் தற்போது இந்தியா முழுவதும் 38 நகரங்களில் 68 ஷோரூம்களை இயக்கி வருகிறது சிம்பிள் எனர்ஜி.

டெல்லி இரண்டு ஷோரூம்கள் உட்பட, நாசிக், அவுரங்காபாத் மற்றும் சிலிகுரி ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக ஐந்து ஷோரூம்களைத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம். கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை மையங்கள் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் மாதங்களில் இதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Simple One Electric scooter

இந்தியாவில் தற்போது இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது சிம்பிள் எனர்ஜி. ஒன்று 'சிம்பிள் ஒன்' (Simple One), மற்றொன்று 'சிம்பிள் ஒன் எஸ்' (Simple One S). விரைவில் இதே லைன்-அப்பில் 'சிம்பிள் அல்ட்ரா' (Simple Ultra) என்ற மேம்பட்ட அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக இந்த சிம்பிள் ஒன் சீரிஸைச் சொல்லலாம். மேற்கூறிய இரண்டு ஸ்கூட்டர்களில் ஃப்ளாக்ஷிப் மாடலான சிம்பிள் ஒன்னில் 4.5 kWh மற்றும் 5 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம். அதேபோல் தொடக்கநிலை சிம்பிள் ஒன் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7 kWh மற்றும் 5 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Simple One EV

இதில் 5.0 kWh பேட்டரி பேக்கானது 265 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த பேட்டரி பேக் கொண்ட மாடலானது அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. சிறிய 3.7 kWh பேட்டரி பேக்கானது 190 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. இதனை மணிக்கு 90 கிமீ வரையிலான வேகத்தில் சாலைகளில் செலுத்த முடிகிறது.

சிறிய பேட்டரி பேக்கை 0-80% வரை 4 மணி நேரத்திலும், பெரிய பேட்டரி பேக்கை 5.20 மணி நேரத்திலும் சார்ஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது சிம்பிள் எனர்ஜி. மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் சார்ஜிங் நேரத்துடன் ஒப்பிடும் போது இது குறைவான அளவு நேரம் தான்.

மேம்பட்ட வசதிகள் கொண்ட ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக இவை இருந்தாலும், விலையும் அதற்கேற்ற வகையில் அதிகமாகவே இருக்கிறது. சிம்பிள் ஒன் (5.0 kWh) மாடலை ரூ.1.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், சிம்பிள் ஒன் எஸ் (3.7 kWh) மாடலை ரூ.1.65 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பெரு மற்றும் சிறு நகரங்களில் சிம்பிள் எனர்ஜி ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலே குறிப்பிட்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக விலையைக் கொண்டிருந்தாலும், விரைவிலேயே விலை குறைவான ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சிம்பிள் எனர்ஜி வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்தியாவில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வட இந்தியாவிலும் விரிவாக்கம் செய்து வருகிறது சிம்பிள் எனர்ஜி, ஏத்தர் எனர்ஜி, ரிவர் மொபிலிட்டி ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைப் போலவே அடுத்த சில ஆண்டுகளில் வெற்றிகரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக சிம்பிள் எனர்ஜியைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் அதிகளவிலான ஷோரூம்களையும் சர்வீஸ் சென்டர்களையும் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாதம் 128% வரை கூடுதல் விற்பனை வளர்ச்சியை இந்த சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் டாப் 10 நிறுவனங்களுள் ஒன்றாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 17:57 [IST]
English summary
Simple energy expanded showroom to 4 more cities totaling 68 showrooms across india
மேலும்... #simple energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+