புதிய விலை குறைவான ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடும் நிறுவனம்

இந்தியாவில் வேகமாக வளர்ந்த வரும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக உள்ளது சிம்பிள் எனர்ஜி (Simple Energy). பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தற்போது சிம்பிள் ஒன் சீரிஸ் (Simple One Series) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்த சிம்பிள் ஒன் சீரிஸ் சற்று விலை உயர்ந்தவையாக இருக்கும் நிலையில், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் வாங்குவதற்கு எளிமையாக இருக்கும்படி குறைவான விலையில் புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அந்நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பைஷாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

Simple Arrive Spy

'அரைவ்' (Arrive) என்ற பெயரில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிள் எனர்ஜி இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் பெயரையே இந்தியாவில் அந்நிறுவனம் சமீபத்தில் டிரேடுமார்க் செய்துள்ளது. எனவே இந்தப் பெயரிலேயே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டில் ஏத்தர் எனர்ஜியின் ஸ்ட்ராடஜியைப் பின்பற்றுகிறது சிம்பிள் எனர்ஜி. முதலில் ஸ்போர்ட்டியான, நல்ல பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று ப்ரீமியமான விலையில். பின்னர் சற்று விலை குறைவான, குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற புதிய ஸ்கூட்டர். இந்த ஸ்ட்ராடஜியைத் தான் ஏத்தர் எனர்ஜி பின்பற்றியது.

Simple Arrive Spy

தற்போது ஏத்தர் நிறுவனத்தின் ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ரிஸ்டா விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. அதன் ஸ்போர்ட்டியான, பெர்ஃபாமன்ஸ் ரீதியிலான 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வளவு விற்பனையாகும் எனக் கூற முடியாது. அது போலவே தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை உயர்த்த புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறது சிம்பிள் எனர்ஜி.

தற்போது அந்நிறுவனத்தின் சிம்பிள் ஒன் சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு மும்மடங்கு அதிக விற்பனையைப் பதிவு செய்து வருகின்றன. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் எனர்ஜியின் விற்பனையை இன்னும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிளாட்டான சிங்கிள் பீஸ் சீட், சிம்பிளான சைடு பேனல்கள், ஷார்ப்னஸ் மிகவும் குறைவாக, ஃபேமிலிக்கு ஏற்ற டிசைன் லாங்குவேஜ் ஆகிய டிசைன் அம்சங்களை புதிய சிம்பிள் அரைவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருப்பதை ஸ்பைஷாட் புகைப்படங்களை வைத்தே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. சிம்பிள் ஒன் சீரிஸ் ஸ்கூட்டர்களைப் போலவே, ப்ரீமியமான வசதிகளை இந்தப் புதிய அரைவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் அந்நிறுவனம் கொடுக்கும் எனத் தெரிகிறது.

சிம்பிள் ஒன் சீரிஸில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே 4.5 kWh மற்றும் 3.7 kWh பேட்டரி பேக் தேர்வுகளே புதிய சிம்பிள் அரைவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான விலையில் வெளியிடும் போதுமான ரேஞ்சுடன் கூடிய இன்னும் சிறிய பேட்டரி பேக் தேர்வையும் புதிய ஸ்கூட்டரில் அந்நிறுவனம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை விட 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை குறைவான விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். இந்த 2026ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த சிம்பிள் அரைவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைவான விலையில் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல டிமாண்டு இருக்கிறது. அதனையே டிவிஎஸ் மற்றும் ஏத்தர் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை காட்டுகிறது. எனவே சிம்பிள் எனர்ஜியின் புதிய அரைவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய இருசக்கர வாகன விற்பனை சந்தையில் வெற்றி பெறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.

Article Published On: Saturday, July 4, 2026, 12:56 [IST]
English summary
Simple energy new family electric scooter launch soon in india
மேலும்... #simple energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out