400km-க்கு சார்ஜ் செய்ய தேவையில்லாத ஸ்கூட்டரை இந்த காரணங்களுக்காகவே வாங்கலாம்! ஓலா எல்லாம் கிட்ட கூட நெருங்கல!
சிம்பிள் எனர்ஜி (Simple Energy), பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனம். சிம்பிள் ஒன் என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மூலமாக மார்க்கெட்டில் கவனத்தை பெற்ற சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக 'அல்ட்ரா' (Ultra) என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற சிம்பிள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல் இல்லாமல், இது மிகவும் அதிக விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் நான்காவது விலையுயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சுமார் ரூ.2.35 லட்சத்தில் புதிய அல்ட்ரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான விலையை நியாயப்படுத்தும் விதமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிகவும் அதிகப்படியான ரேஞ்ச்: புதிய அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக சுமார் 400கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, இதன் 6.5kWh திறன் கொண்ட பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் (Charge) நிரப்பினால் அதிகப்பட்சமாக 400கிமீ தொலைவிற்கு போகலாமாம். ஓலாவில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எஸ்1 புரோ+ (S1 Pro+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 320கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.
அதிநவீன கனெக்டிவிட்டி வசதிகள்: அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 7-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே ஆனது ஆண்ட்ராய்டு 12-ஐ ஏற்கக்கூடிய சிம்பிள் ஒஎஸ் மென்பொருளால் இயக்கப்படுகிறது. மேலும், 'மேப் மை இந்தியா' (Map My India) மென்பொருளின் மூலம் பயணத்திற்கான வழிக்காட்டியையும் இந்த டிஸ்பிளேவில் பெறலாம். இவற்றுடன், ப்ளூடூத் (Bluetooth), 5ஜி இ-சிம் கனெக்டிவிட்டி போன்ற அட்வான்ஸ்டு அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்: பயணிகள் மற்றும் வாகனம் என இரண்டிற்கும் பாதுகாப்பா, டயர்களில் காற்றழுத்ததை கண்காணிக்கும் சிஸ்டம் (TPMS), க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், கைடு-மீ-ஹோம் விளக்குகள், பல்வேறு ரைடிங் மோட்கள், 4 நிலைகளில் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் வாகனம் கீழே விழுந்தால் அதுகுறித்த எச்சரிக்கை போன்ற வசதிகளை புதிய சிம்பிள் அல்ட்ரா கொண்டுள்ளது.
சிறந்த செயல்படுதிறன்: அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 8.8 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 72 என்.எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த அதிகப்படியான டார்க் திறன், ஸ்கூட்டரில் உடனடியாக ஆக்ஸலரேஷனை வழங்குகிறது. இதன் மூலமாக, 0-இல் இருந்து மணிக்கு 40கிமீ வேகத்தை வெறும் 2.77 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 115கிமீ ஆகும்.
ரைட் மோட்கள் (Ride Modes): இந்த ஸ்கூட்டரின் பல்வேறு விதமான ரைட் மோட்கள் மூலம் ரைடர்கள் தங்களுக்கு ஏற்ற செயல்படுதிறன் உடன் ஸ்கூட்டரை இயக்க முடியும். ஈக்கோ மற்றும் ஈக்கோ எக்ஸ் ரைட் மோட்கள் அதிக ரேஞ்சை பெற வழிவகுக்கக் கூடியவைகளாகவும், ரைடு மற்றும் ஏர் ரைட் மோட்கள் ரேஞ்ச் மற்றும் செயல்படுதிறன் என இரண்டும் கலந்த கலவையாக இருக்கும் நிலையில், இந்த ஸ்கூட்டரில் அதிகப்பட்ச செயல்படுதிறனை பெற சோனிக் மற்றும் சோனிக் எக்ஸ் ரைட் மோட்கள் ஏற்றவை ஆகும்.
சிறந்த ஏரோடைனமிக்ஸ் (Aerodynamics): பொதுவாகவே சிம்பிள் எனர்ஜியின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவற்றின் ஸ்போர்டியான தோற்றத்திற்கு பாராட்டப்படுபவைகளாக உள்ளன. அப்படியிருக்க, புதிய அல்ட்ரா ஆனது விங் மிரர்கள் மற்றும் பேட்டரியை குளிர்விப்பதற்கான காற்றுத்துளைகள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காற்றில் ஸ்கூட்டர் எளிதாக நுழைந்து செல்ல இந்த அம்சங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.2.35 லட்சம் என்கிற விலைக்கேற்ப புதிய அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தரமாக உருவாக்கி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆதலால், அதிக செலவு செய்தாவது ஒரு முழுமையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புபவர்களுக்கு சிம்பிள் அல்ட்ரா ஏற்றதாக இருக்கும். குறிப்பாக, இதன் 400கிமீ ரேஞ்ச் ஆனது பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








