செப்டம்பர் 2ல் அறிமுகமாகிறது புதிய சிம்பிள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஏத்தர் ரிஸ்டாவுக்கு போட்டி!!

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் குடும்ப பயன்பாட்டுக்கான மாடல்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனைல், இந்த பிரிவை குறிவைத்து பல புதிய மாடல்கள் வரத் துவங்கி உள்ளன. வரும் 29ந் தேதி ஏத்தர் நிறுவனம் புத்தம் புதிய ஸ்கூட்டரை இந்த செக்மென்ட்டில் களமிறக்க உள்ள நிலையில், பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனமும் இந்த ரகத்தில் புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

வரும் செப்டம்பர் 2ந் தேதி இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இதுவரை சிம்பிள் அரைவ் என்ற பெயரில் குறிப்பிடப்பட்ட இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் வேவ் (Simple Wave) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏத்தர் ரிஸ்ட்டா, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Simple EV

(Representational Image)

இதன் பேட்டரி, மின் மோட்டார், ரேஞ்ச் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்நிறுவனம் இதுவரை முழுமையாக வெளியிடவில்லை. எனவே தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் சில எதிர்பார்ப்புகள் மற்றும் சோதனை வாகனங்களில் காணப்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், நிச்சயம் இது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களை பெற்று வருகிறது.

தற்போது விற்பனையில் உள்ல சிம்பிள் One மற்றும் OneS போன்ற ஸ்கூட்டர்கள் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றிருக்கும் நிலையில், இந்த புதிய மாடல் முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சங்களுடன் வருகிறது. அதாவது, குடும்ப பயன்பாட்டை மனதில் வைத்து நீளமான இருக்கை, தட்டையான ஃப்ளோர்போர்டு, நேரான ரைடிங் பொசிஷன் மற்றும் நடைமுறை பயன்பாட்டுக்கு எளிதான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி அலுவலகப் பயணம் மட்டுமின்றி, இருவர் பயணிக்கும் குடும்ப பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் இந்த ஸ்கூட்டரின் முன்பக்க ஏப்ரானில் எல்இடி ஹெட்லைட், அதனுடன் இணைந்த பகல்நேர விளக்குகள் ஆகியவை இடம்பெற்றிருப்பது தெரிகிறது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதி சிம்பிள் வேவ் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டார் விவரங்களை நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. இருப்பினும், சிம்பிள் OneS மாடலில் பயன்படுத்தப்படும் 3.7 kWh பேட்டரி மற்றும் 6.4 kW மோட்டார் ஆகியவை இதிலும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. மேலும், OneS ஸ்கூட்டர் தற்போது 3.7 kWh பேட்டரியுடன் IDC சோதனை முறையில் 190 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குவதாக சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால் வேவ் ஸ்கூட்டர் குடும்ப பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுவதால், இதே பேட்டரி மற்றும் மோட்டார் அமைப்பு பயன்படுத்தப்பட்டாலும் அதன் செயல்திறன் மற்றும் உண்மையான ரேஞ்ச் மாறுபடலாம். எனவே 190 கி.மீ ரேஞ்சை தற்போதைக்கு உறுதியான தகவலாக எடுத்துக்கொள்ள முடியாது.

தற்போது விற்பனையில் உள்ள சிம்பிள் ஒன் மற்றும் மற்றும் OneS மாடல்கள் பிரீமியம் மாடலாக சிறப்பம்சங்கள் மற்றும் விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் புதிய வேவ் ஸ்கூட்டர் அதிக வர்த்தகத்தை கொண்ட குடும்ப ஸ்கூட்டர் சந்தையை குறிவைத்து உருவாக்கப்படுவதால், விலையை சவாலாக நிர்ணயிக்க சிம்பிள் எனெர்ஜி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் செப்டம்பர் 2ந் தேதி அதிகாரப்பூர்வ விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வெளியிடப்பட உள்ளது.

வரும் 29ந் தேதி ஏத்தர் நிறுவனம் கோனார்க் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இதே ரகத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், சிம்பிள் எனெர்ஜி நிறுவனமும் தற்போது அதே ரகத்தில் புத்தம் புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, August 20, 2026, 17:42 [IST]
English summary
Simple wave electric scooter launch date confirmed rizta iqube chetak rival
மேலும்... #simple energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out