சிம்பிள் வேவ் EV ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை ரூ.1.90 லட்சம்... முழு விலைப்பட்டியல்!!

குடும்ப பயன்பாட்டு அம்சங்களுடன் கூடிய வேவ் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள், ரேஞ்ச், விலை என அனைத்தும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வேரியண்ட் வாரியான விலை விவரங்கள் தற்போது நிறுவனத்திடமிருந்து எமக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளன.

இந்த புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிமுக விலையாக ரூ.1,09,999 அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது 6 வேரியண்ட்டுகளின் முழுமையான விலைப்பட்டியல் கிடைத்துள்ளது. இதன்படி, சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.1,09,999 முதல் டாப் வேரியண்ட்டிற்கு ரூ.1,89,999 வரை எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Simple Wave

சிம்பிள் வேவ் வரிசையில் Wave S, Wave மற்றும் Wave+ என மூன்று முக்கிய மாடல்களில் கிடைக்கும். பேட்டரி திறன் மற்றும் டிஸ்பிளே தேர்வுகளுக்கு ஏற்ப இவை 6 வேரியண்ட்டுகளாக வழங்கப்படுகிறது. இதில் குறைந்த விலை மாடலாக Wave S என்ற மாடல் உள்ளது. இது இரண்டு விதமான பேட்டரி பேக்குகளில் கிடைக்கும். முதலாவதாக 2.2 kWh பேட்டரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் IDC சோதனைச் சான்றுபடி 110 கிமீ ரேஞ்ச் வழங்கும். குறைந்த பட்ஜெட்டில் சிம்பிள் வேவ் ஸ்கூட்டரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த வேரியண்ட் அடிப்படை தேர்வாக இருக்கும். அடுத்ததாக 2.7 kWh பேட்டரி கொண்ட Wave S வேரியண்ட்டிற்கு ரூ.1,39,999 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. IDC சோதனை சான்றுபடி இதன் பேட்டரி முழு சார்ஜிற்கு 132 கிமீ ரேஞ்ச் தரும்.

இதன் Wave S 2.7 வேரியண்ட்டில் TFT டிஸ்ப்ளே மாடலுக்கு விலை ரூ.1,49,999 என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 2.7 kWh பேட்டரியுடன் TFT டிஸ்பிளேவை தேர்வு செய்யும்போது ரூ.10,000 கூடுதலாக செலுத்த வேண்டும்.

இதற்கு அடுத்ததாக 3.7 kWh பேட்டரி கொண்ட Wave மாடல் வருகிறது. இதில் EBN டிஸ்பிளே கொண்ட Wave 3.7kWh EBN என்ற வேரியண்ட்டின் விலை ரூ.1,59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதே பேட்டரியுடன் TFT டிஸ்பிளே கொண்ட Wave 3.7 TFT வேரியண்ட்டின் விலை ரூ.1,74,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டு வேரியண்ட்களுக்கும் இடையே ரூ.15,000 விலை வித்தியாசம் உள்ளது. இந்த மாடல் IDC சான்றுபடி 171 கிமீ ரேஞ்ச் வழங்கும்.

சிம்பிள் வேவ் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டாக Wave+ என்ற மாடலில் 5 kWh பேட்டரி மற்றும் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ரூ.1,89,999. எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் பேட்டரிதான் முழுமையான சார்ஜிற்கு 243 கிமீ தூரம் வரை பயணிக்கும் ரேஞ்சை வழங்கும். அடிப்படை Wave S 2.2 வேரியண்ட்டை விட ரூ.80,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களின் பார்வையில், ரூ.1.10 லட்சம் பட்ஜெட்டில் அடிப்படை வேரியண்ட்டை தேர்வு செய்ய முடியும். அதிக பேட்டரி திறன் தேவைப்படுபவர்கள் 2.7 kWh அல்லது 3.7 kWh மாடல்களுக்கு செல்லலாம். அதிகபட்ச பேட்டரி திறனை விரும்புபவர்களுக்கு 5 kWh கொண்ட Wave+ தேர்வாக உள்ளது.

புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் NCA பேட்டரி கொண்ட வேரியண்ட்டுகளின் டெலிவரி வரும் 25 முதல் தொடங்கும் என சிம்பிள் எனர்ஜி தெரிவித்துள்ளது. அடுத்து LFP பேட்டரி கொண்ட வேரியண்ட்டுகளின் டெலிவரி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Friday, September 4, 2026, 8:42 [IST]
English summary
Simple wave electric scooter variant wise official price rs 110999 to rs 189999 range details
மேலும்... #electric scooter #simple energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out